பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

i2 திற்கு குறைவென்று மதிப்பார்கள். அன்றியும் வடக்கில் பாடுபவர் களே இதை ஒரே ராகத்தில் பாடாமல் பல ராகங்களைக் கலந்து பாடுகிறார்கள், தாளக்கட்டிலும் அப்படியே. சாஹித்தியமும் சிறந்த தல்ல. அப்படியிருக்க இந்த வாத்தியக்காரன் அப்பாட்டை வாசிப்ப தில் ராகசுத்தமுமில்லை, தாளசுத்தமுமில்லை, சாஹித்தியத்தையும் கொலைசெய்து வாசிக்கிறான். நாம் சீக்கிரம் தங்கள் வீடுபோய்ச் சேரும் வழியை தயவு செய்துபாருங்கள்” என்றார், அதன்பேரில், என் வண்டிக்காரனிடம் சொல்லி, எப்படியாவது வண்டியைத் திருப்பிக் கொண்டு, பக்கத்துவீதி வழியாக வீடுபோய்ச் சேரும்படி கட்டளையிட, அவன் ஜனநெருக்கத்தில் கஷ்டப்பட்டு அப்படியே செய்தான். அப் படிச் செய்தபொழுது அந்த 'சல் சல் ஜவான்’ சங்கீதம் காதில் விழாத தூரம் வரையில், எனது நண்பருடைய முகம்வாட்டம் நீங்க வில்லை. என் வீடுபோய்ச் சேர்ந்தவுடன் என் அதிதியை, மேற்கட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், அவரது காலைக்கடன்களையெல்லாம் முடிக்கச் செய்து, அவருக்கு வடக்கே கிடைக்ககாத இட்லியையும் காப்பியையும்,கொடுக்க, அவர் அதை மிகவும் சந்தோஷத்துடன் புசித் துக்கொண்டிருந்தார். அப்பொழுது மணி ஏறக்குறைய ஒன்பதாயிற்று. உடனே கீழிருந்து ஹார்மோனியம் பெட்டி வாசிக்கும் சப்தம் கேட் டது. உடனே அவர், 'இதென்ன வாத்தியம்' என்று கேட்க நான் என்து இரண்டு பேத்திமார்களுக்கு, பாட்டு வாத்தியார் பாட்டுக் கற்பிக் கிறார், என்று கூற, அவர் 'மிகவும் சந்தோஷம் ஆயினும், இந்த ஆர் மோனியம் பெட்டி ச்ருதியை வைத்துக் கொள்வதைவிட்டு,நம்முடைய தேசத்து ச்ருதியாகிய தம்புராவை வைத்துக்கொண்டால், நல்லதல் லவா?" என்று தெரிவித்தார் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் பேத்தி களாகிய கற்பகமும், லட்சுமியும், சரளி வரிசையை முடித்து ஒரு கீதமும் வர்ணமும் பாடக் கேட்டவராய் அவர் அவர்கள் குரலை மெச்சிக் கொண்டிருக்கும் பொழுதே, உடனே என் பேத்திமார்களுக்கு அவர்கள் பாட்டு உபாத்தியாயர் 'சல் சல் ஜவான்' என்னும் பாட்டைக் கற்பிக்க ஆரம்பித்தார், உடனே எனது.புதிய நண்பர் முகம் கோணியது ஒருபுறமிருக்கட்டும், எனக்கே மிகவும் கோபம் பிறக்க. நான் உடனே பாட்டு உபாத்தியாயரை இந்தப் பாட்டை இவர்களுக்கு உங்களை யார் கற்பிக்கச்சொன்னது?" என்று கேட்க, அவர் 'பட் டணம் எல்லாம் எல்லோரும் படுகிறார்களே, ஆகவே குழந்தை களுக்கும் அப்பாட்டைக் கற்பிக்க வேண்டுமென்று அம்மா சொன்னார் கள்,' என்று பதில் உரைத்தார், ஆயினும் அது வேண்டாம்; வேறு ஏதாவது கற்பியுங்கள்” என்று சொல்லிவிட்டு, மேலேவந்து எனது நண்பரிடம் நடந்த செய்தியைச் சொன்னேன். அப்போது அவர் 'உங் கள் பாட்டுவாத்தியாருக்கு இந்துஸ்தானி பாஷை தெரியுமா?’ என்று