பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

14 களைக் கேட்டு என் நண்பர் மிகவும் ஆனந்தித்தார். "இப்படிப்பட்ட பாடகர்களுடைய பாடல்கள் கர்நாடகத்தி லிருக்கும்பொழுது, வடக்கத் திய நாடகப்பாட்டு...' என்று சொல்ல ஆரம்பித்தாரோ இல்லையோ, திருச்சிராப்பள்ளி ரேடியோவிலிருந்து 'சல்சல் ஜவான்' பாட்டு ஆரம் பித்தது! அதன்பேரில் என் அதிதி ஒன்றும் கூறுவதற்குமுன்பே, ரேடியோ பெட்டியின் விசையை மூடி பாட்டை நிறுத்தினேன். அவர் அதைக் கண்டு முதலில் புன்னகை செய்து பெருமூச்சு விட்டார். அதன் பிறகு "ரெயில் பிரயாணம் செய்த சிரமம் நீங்க, கொஞ் சம் சயனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, அப்படியே அவரைப் படுக்கச் செய்து, சாயங்காலம் நான்கு மணிக்கு எழுப்பினேன். பிறகு தேனீர் சாப்பிட்டுவிட்டு, ஓர் பிரபல சங்கீத சபையின் கச்சேரிக்கு 5 மணிக்கு அழைத்துச் சென்றேன். அச்சபையின் காரியதரிசிக்கு எனது புதிய நண்பர் இன்னாரெனத் தெரியப்படுத்தியவுடன், எங்களை பாடிக்கொண்டிருந்த பிரபல சங்கீத வித்வான் அருகில் அழைத்துக் கொண்டுபோய் உட்காரவைத்தார். அச்சமயம் உள்ளூர் வித்வான் மோகன ராகத்தில் ஒரு பாட்டை பாடிக்கொண்டிருந்தார் வெகு அழகாக. எனது புதிய நண்பர், அவர், பாடியதை மிகவும் மெச்சி, இந்த ராகத்திற்கு கர்னாடகத்தில் என்ன பெயர் என்று கேட்க, நான் மோகன என்று பதில் உரைத்தேன், 'இந்த ராகம் அழகியது, எங்கள் தேசத்தில் இதற்கு பூபாளி என்று பெயர்', என்று கூறினார். உள்ளூர் வித்வான் பேசிக்கொண்டிருந் ததைப் பற்றி வினவ, நான் அதைத் தெரிவித்து 'என் புதிய நண்பர் நீங்கள் பாடியதை மிகவும் மெச்சினார்' என்று சொல்லி, அவர் இன்னா ரென்றும் தெரிவித்தேன். அதை நான் சொல்லியதுதான் தாமதம், உடனே உள்ளூர் வித்வான், வடக்கிலிருந்து வந்தவரைக் கெளரவப் படுத்துவதாகவோ அல்லது தனக்கும் இந்துஸ்தானி சங்கீதம் தெரியும் என்று அவருக்கு அறியப்படுத்தவோ, உடனே 'சல் சல் ஜவான்' பாட்டைப் பாட ஆரம்பித்தார். உடனே என் புதிய நண்பர் முகம் மாறியதை பார்த்திருக்க_வேண்டும் வந்திருந்தவர்களில் யாராவது படம்பிடிக்கக் கற்றுக் கொண்டவர்களா யிருந்தால் உடனே, அவர் முகத்தை படம்பிடித்திருப்பார்கள். எனது புதிய நண்பர், நாடக மேடையில் நடித்திருப்பவரோ அல்லவோ எனக்குத் தெரியாது. ஆயி னும் உடனே தன் கோணிய முகத்தை மாற்றிக் கொண்டு புன்னகை கொண்டவராய் ஏதோ தன்_கடியாரத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து 'முதலியார் சார்! நாம் வேறொரு இடத்திற்குப் போக நிச்சயித்திருப் பதை ஞாபகப்படுத்துகிறேன்" என்றார், "அதைக் கேட்டதும் அவ ரது குறிப்பறிந்தவனாய், "ஆம், ஆம் நேரமாகிவிட்டது' என்று சொல்லி அவசரமாய், உள்ளுர் சங்கீத வித்வானிடமிருந்து விடை