பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

38 உங்களுக்கு என்ன மிட்டாய் வேண்டும் ? 'என்று கேட்க குரு “எனக்கல்ல நான் மிட்டாய் சாப்பிடுவதில்லை, நீ வாங்கிக்கொண்டு வா' என்று ஆக்ஞாபிக்க சிஷ்யன் எட்டணாவுக்கு பூந்தி லட்டு வாங்கிக்கொண்டு வந்தான் சிஷ்யன் வீட்டிற்கு இருவரும் போனவுடன் குரு அப்பா உன் பெரிய குழந்தையைக் கூப்பிட்டு அவனிடம் இந்த மிட்டாயைக் கொடுத்து குழந்தைகளை யெல்லாம் சாப்பிடச்சொல்' என்றார் சிஷ்யன் அப்படியே செய்ய அப்பெரிய குழந்தை தன் தம்பிக்கும் தங்கைக்கும் லட்டில் கொஞ்சம் கொடுத்துவிட்டு பெரிய வரிடம் வந்து தாத்தா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா' என்று கேட்க குரு 'எனக்கு வேண்டாம் அப்பா நீ கேட்டியே அதுவே போதும் எனக்கு" என்று சொன்னார், கடைசியில் அக்குழந்தை தன் தகப்பனாரிடம் போய் அப்பா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள் மிகவும் நன்றாய் இருக்கிறது” என்று தகப்பன் கையில் கொடுக்க சிஷ்யன் அதை வாங்கி மிகவும் சந்தோஷத்துடன் புசித்தான். அப்பொழுது குருவானவர் நீ கேட்ட கேள்விக்குப் பதில் இப்போது கிடைத்ததா' என்று சிஷ்யனைக் கேட்க சிஷ்யன் ஸ்வாமி பதிலும் கிடைத்தது புத்தியும் வந்தது' என்று பதில் உரைத்தான்.


14. ஒருநாள் ஏதோ ஒரு கஷ்டத்துக்கு உட்பட்ட சிஷ்யனவன் சுவாமி!கருணைக்கடவுள் மனிதனுக்கு ஏன் கஷ்டத்தை அடிக்கடி அனுப்புகிறார் ? என்று கேட்டான் அதற்கு குருவானவர் இதற்கு பதில் ஒரு விதத்தில் கூறுகிறேன். சந்தோஷமாய் இருக்கும் போது எத்தனை பேர் கடவுளைப் பற்றி நினைக்கிறார்கள் ஆயிரத்தில் ஒருவன் கூட இருக்க மாட்டான் அல்லவா ? சாதாரண மனிதன் கஷ்டம் வந் தால் தானே கடவுளைப்பற்றி நினைக்கிறான். இதற்காக இருக்கலாம் ஒரு வேளை, நீ மஹாபாரதத்தில் குந்தி தேவியின் வாக்கியத்தை கேட்ட தில்லையா? ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவர்களிட மிருந்து தன் ஊருக்கு போக விடை கேட்கும் போது "அத்தை! உனக்கு என்ன வேண்டும் சொல்' என்றாராம், இதற்கு குந்தி கிருஷ்ணா எனக்கு மேலும் மேலும் கஷ்டமே வர வேண்டும் என்றார்களாம்" அதன் பேரில் கிருஷ்ணன் "என்ன அத்தை! எல்லோரும் நன்மை வர வேண்டும் என்று கோருகிறார்களே, நீ மாத்திரம் இப்படி கேட் கின்றாயே' என்று கேட்க குந்தி "கிருஷ்ணா! மேலும் மேலும் கஷ்டங்கள் வந்தால் தான் உன்னை நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன்" என்று பதில் தந்தார்களாம்.


15. ஒரு நாள் குருவானவர் சிஷ்யனைப் பார்த்து "அப்பா! இனி நீ கல்யாணம் செய்து கொண்டு கிரகஸ்த ஆஸ்சிரமத்தை மேற் கொள்ள வேண்டும்" என்று கட்டளையிட சிஷ்யன் வருத்தத்துடன் "என்ன ஸ்வாமி! இத்தனை வருடங்களாக உங்களுடன் பழகி துறவறத்தின் தூய்மையை