பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41

41 இஷ்டத்தை நிறைவேற்றுவாராக!,என்று ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போய்விட்டார்.


மறுவருடம் சிஷ்யன் பிறந்ததினம் குரு வந்தபோது, அவன் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தபோது 'சுவாமி, என்தேகம் செளக்கிமாதத்தானிருக்கிறேன், உங்கள் ஆசீர்வாதத்தால்', என்று பதில் உரைக்க 'அப்பா!, உன் மனதில் இன்னும் ஏதோ குறை இருக்கிறது போல் தோன்றுகிறதே, அதையும் தெரிவி என்று கேட்க-சிஷ்யன் "சுவாமி, என் தங்கை ஒருத்தி வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்: அவள் அசெளக்கியமாயிருக்கும்போது, என் மனதில் நிம்மதியில்லா திருக்கிறது. ஆகவே, என் உற்றார் உறவினர் எல்லோரும் க்ஷேமமாயி ருக்க வேண்டுமென்று, ஆசிர்வதியுங்கள் ! "என்று வேண்டினான், குரு "பரமாத்மா உன் மனோபீஷ்டத்தை நிறைவேற்றுவாராக!" என்று சொல்லிப் போனார்,


மறுவருடம் வந்து குருவானவர் வழக்கப்படி சிஷ்யன் யோகட் சேமத்தை விசாரித்தபோது, சிஷ்யன் "சுவாமி!, எங்கள் தெருவில், வாந்தி பேதிகண்டு சிலர் மாண்டனர் அவர்களில் ஒருவர் என் நண்பர்-ஆகவே, என் தெருவிலும் அக்கம் பக்கங்களிலும் உள்ளவர்களும் சவுக்கியமாக இருக்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள் ! "என்று கேட்டுக் கொண்டான் முன்போலவே குருவானவரும் 'பரமாத்மாவின் அருளால் அங்கனமே ஆகும்', என்று ஆசிர்வதித்துப் போனார். -


மறு வருடம் குருவானவர் சிஷ்யனைச் சந்தித்து, தன் வழக்கப்படி அவனது யோகட்சேமத்தை விசாரித்தபோது சிஷ்யன் "இவ்வருடம் எங்கள் ஊரில் பிளேக் வியாதி வந்திருக்கிறது அதனால் அதிகம்பேர் மாண்டார்கள்; எனக்கும் எந்த சமயம் என்னையும் என் சுற்றத்தாரையும் பீடிக்குமோ என்னும் பயம் அதிகமாயிருக்கிறது ஊரெங்கும் இந்த வியாதி நீங்கி, என் பயமும் நீங்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள்", என்று கேட்டுக் கொண்டான் குருவும் 'பரமாத்மா அருளால் அவ்விதமே ஆகும்' என்று ஆசிர்வதித்துப் போனார். -

மறு வருடம் வந்தபோது 'சுவாமி என் வரைக்கும் க்ஷேமமாகத் தானிருக்கிறேன் ஆயினும் அதில் என்ன பிரயோஜனம் நமது தேசத்திலேயே பஞ்சம் வந்திருக்கிறது எத்தனை ஜனங்கள் உண்ண உணவின்றி பரிதபிக்கின்றனர்; அதைக்கண்டு என் மனம் சகிக்க வில்லை நமது இந்தியா தேசமுழுவதும் பஞ்சம் நீங்கி ஜனங்கள் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள் என்று வேண்டிக்கொள்ள, அதன்படியே குருவும் ஆசிர்வதித்துப் போனார்.