பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37

37 அப்போது அங்கிருந்தவர் 'என்ன அம்மா! சுவாமியிருக்கிற இடத்துக்கு எதிரில் காலை நீட்டி படுக்கலாமா?' என்று கோபித்துக் கேட்டார்களாம், அதற்கு ஒளவை, "ஐய்யா! கோபிக்காதீர்கள், சுவாமி இல்லாத இடத் தைக் காட்டுங்கள் அந்தப் பக்கம் என் காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறேன்", என்று பதில் சொன்னார்களாம். இப்பொழுது தெரி கிறதா நான் கூறியதின் அர்த்தம் என்று பதில் சொல்லி சிஷ்யனுக்கு புத்தி கற்பித்தார் குருவானவர்


12. ஒரு நாள் குருவும் சிஷ்யனும் இரயிலில் ஏறி காலை முதல் சாயங்காலம் வரையில் பிரயாணம் செய்து விட்டு ஒரு ஓட்டலுக்குப் போய் சாப்பிட உட்கார்ந்தார்கள், அப்பொழுது சிஷ்யன் " சுவாமி இன்றைக்கு குளித்து பூஜை செய்யாமல் சாப்பிடுகிறோமே ! இதற்கு என்ன செய்வது? என்று கேட்டான் அதற்கு அவர் பின் வருமாறு விடை பகர்ந்தார், 'அப்பா இரயில் இருக்கும்போதே ஸ்நானமும் பூஜையும் முடித்துக் கொண்டேன்-மான சீகமாய், நீ மஹாபாரதத்தில் படித்ததில்லையா ?- அந்த கதையை சொல்கிறேன்; அர்ஜுனன் தான் தான் பெரிய சிவபூஜை செய்கிறதாக கர்வம் கொண்டிருந்தான். அதை அடக்க வேண்டும் என்று கிருஷ்ணபகவான் அர்ஜுனனை அழைத்துக்கொண்டு கைலாயத்துக்கு போகும் வழியில் சிவகணங்கள் எல்லாம் பெரிய கூடைகளில் புஷ்பங்களை எடுத்துக்கொண்டு எதிரில் வருவதை பார்க்கச் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அப்பூதங்களை "இந்த புஷ்பங்கள் எல்லாம் ஏது?" என்று கேட்க அப்பூதங்கள் "என்ன ஸ்வாமி! பூலோகத்தில் பீமன் என்ற ஒருவன் மான சீகமாக கூடை கூடையாய் புஷ்பங்களால் சிவபெருமானைப் பூஜிக்கிறான் அப் புஷ்பங் களை தினமும் களைந்து விடுவதே எங்களுக்கு பெரிய கஷ்டமாய் போயிற்று' என்று பதில் உரைத்தன, அர்ஜுனன் கர்வம் அடங்கிற்று, மான சீகபூஜை என்றால் இன்னதென்று தெரிந்துக் கொண்டான். இப்போது நீயும் தெரிந்துக் கொண்டாய் அல்லவா என்று கூறி முடித்தார்.


13. ஒரு முறை குருவும் சிஷ்யனும் சாயங்காலம் கோயிலுக்குப் போய் அங்கு நடக்கும் சாயங்கால தீபாராதனையை பார்த்துவிட்டு திரும்பினார்கள். வீட்டுக்கு போகிற வழியில் சிஷ்யன் குருவைப் பார்த்து'ஸ்வாமி, கடவுள்தானே நமக்கு எல்லாப் பொருள்களையும் கொடுக்கிறார், அவருக்கே அவர் கொடுக்கும் பொருள்களையே நைவேத்யம் செய்வதில் என்ன அர்த்தம்' என்று கேட்டான் குருவானவர் பதில் ஒன்றும் சொல்ல வில்லை. உடனே, கொஞ்சம் துரம் வழியில் ஓர் மிட்டாய் கடையண்டை வரும்போது குரு சிஷ்யனை கொஞ்சம் மிட்டாய் வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார்; சிஷ்யன்