பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is - சிலந்தி |

"இங்கேயா இருக்கிறே?" என்று முனங்கியபடி அவன் வேகமாக அறைந்தான். செருப்பு பூச்சியின் மீது பட்டது. ஆயினும் அதைச் சாகடிக்கும் விதத்தில் தாக்கவில்லை. அது ஓடியது. அதன் கால் ஒன்று தரையில் தனியாகக் கிடந்தது.

பூச்சி வேறொரு இடம் சேர்ந்து அசையாமல் நின்றது. சிதம்பரம் தாமதிக்கவில்லை. இந்தத் தடவை தவறு செய்யவுமில்லை. சரியாக அதைக் தாக்கி நசுக்கித் துவைக்கும் விதத்தில் செருப்பை உபயோகித்தான்.

சிதைந்து, உருக்குலைந்து அசிங்கமான திரவமும் உடலும் கூழாகிவிட்ட நிலையில் காட்சி அளித்தது சிலந்தி.

அதைத் துடைப்பத்தால் எடுத்துத் துர எறிந்து விட்டு அவன் டுக்கையில் படுத்தான். விளக்கு எரிந்து கொண்டு தானிருந்தது. அவன் மனம் ஒடுங்க வில்லையே! அவனுக்கு இனி தூக்கம் பருவதாவது. - - -

சிலந்திப் பூச்சி என்றாலே சிதம்பரத்துக்கு மன உளைச்சல்தான். அவனுக்கு அது ஒரு "அப்ஸ்ஷன்",

சிலந்தி மிக மோசமான ஜந்து என்பது சிதம்பரத்துக்கு அவனது எட்டாவது வயசில் புரிந்தது.

அவன் உடலில் வட்டம் வட்டமாக "பற்று' படர்ந்தது. அரிப்பெடுத்தது. சொறிந்தால், புள்ளிகள்போல் அடை அடையாய் தென்பட்டன. அவை கழுத்திலும், மார்பிலும், முதுகிலும், எங்கும் பரவின. -

'இது எட்டுக்கால் பூச்சி விஷத்தினால் ஏற்பட்டிருக்குது. நீ துங்குகிறபோது சிலந்திப் பூச்சி கடித்திருக்கும். இதற்கு பார்வை பார்க்கணும்" என்ற பெரியம்மா ஒருத்தி உபதேசித்தாள். "பார்வை பார்ப்பதில் தேர்ந்த ஒரு பெரியவர் இருக்குமிடத்தையும் அவள் குறிப்பிட்டாள். போகும்போது ஒரு பாட்டிலும் கொண்டு போ பச்சை நிற பாட்டில் வேணுமின்னு அவர் சொல்லுவார். வெள்ளை பாட்டில் ஆகாதாம். அதனாலே பச்சை பாட்டிலே எடுத்துப் போ. அவரு மந்திரிச்சு தண்ணீர் தருவாரு அதை என்ன செய்யனுமின்னும் சொல்லுவாரு" என்றும் அறிவித்தாள்.