பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

சிலந்தி

சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்க க. கொண்டிருந்தது. உள்ளத்தின் பதை பதைப்பும் ஒடுங்கிவிடவில்லை.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பரபரவென்று போர்வையை உதறினான். அவனை அப்படி எழுந்திருக்கும்படி தூண்டியது.

அது தான் அவனுக்குப் புரியவில்லை. அது வெறும் கனவா? நனவு தூண்டிய உணர்வா? அல்லது. உள்ளுணர்வு தந்த அபாய அறிவிப்பா? கனவு என்றால்நிஜமாக முன் நின்றது அதை மறக்கும்படி தூண்டியது. நிஜம்-நனவின் விளைவு-என்றால், தூங்கிக் கொண்டிருந்தவன், கன்னக் கனிந்த இருட்டிலே அதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது எவ்வாறு? உள்ளுணர்வின் உந்துதல் என்றாலோஉள்ளுணர்வு உணர்வைத் தூண்டலாம். மூளையை விழிப்புறச் செய்யலாம். தூங்கும்போது கூட, கண்ணினால் காண்பது போல் பளிச்செனப் புலப்படுத்துவதற்கு அதற்கு ஏது சக்தி? உள்ளுணர்வு அதீதமான கண்களும் பெற்றிருக்குமோ?

சிதம்பரத்துக்கு எதுவுமே புரியவில்லை. அறிவைக் குழப்பும் விஷயமாகத்தான் அமைந்தது அது. -

-இரண்டு கண்கள். அவனையே வெறித்து நோக்கும் ஒளிப்பொறிகள். சூரியனின் கதிர்களை ஏற்றுப் பளீரென