பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வல்லிக்கண்ணன் 鬣 "நான் தான் அன்றைக்கே சொன்னேனே அவன் ஜெயித்து விட்டால் எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக் கொடுத்தாகணுமே. அந்தப் பயம் தான் காரணம்" என்று பாலு சொன்னான். தனது கட்சி சரி என்பதில் அவனுக்கு எவ்வளவோ பெருமை!

அவன் சொல்வது உண்மை என்று அவனுடைய சிநேகிதர்கள் ஆமோதித்தார்கள்.

"பாவம், ஏழைப் பையன்" என்று சுந்தரம் சொன்னான்.

அதுக்காக நம்மை அவன் ஏமாற்றலாமோ? முன்பெல்லாம்

ஒட்டப் பந்தயத்தில் அடிக்கடி அவன் தான் முதலில் வருவான். இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும்படி கவனித்துக் கொள்கிறானே'

"சடுகுடு விளையாட்டில் அவன் தான் கடைசிவரை பிடிபடாமல் இருப்பான். இப்ப என்னடான்னா சீக்கிரமே அகப்பட்டுக் கொள்கிறான்."

இப்படி ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

"நாம் கொடுப்பதை மட்டும் வாங்கி மொக்கி விடுகிறான் என்று குறைகூறினான் பாலு. அவன் பெரிய வீட்டுப் பையன் தான். ஆயினும் அவனுக்கு "சின்னப்புத்தி அதிகம்.

முருகையா இல்லாதபோது தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவன் செயலைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு திட்டமும் வகுத்தார்கள்.

"இன்றைக்கு வெறும் விளையாட்டு தான். யாரும் யாருக்கும் எதுவும் சப்ளை செய்ய வேண்டியதில்லை" என்று தன்னைத் தானே "தளபதி"யாக நியமித்துக் கொண்ட ஒருவன் அறிவித்துவிட்டான்.

அன்று முருகையா உற்சாகமாக விளையாடினான். வழக்கமான தீவிரத்துடன் கலந்து சில விளையாட்டுகளில் முதன்மை பெற்றான். அவன் திறமைசாலிதான். அதில் யாருக்குமே சந்தேகம் கிடையாது. "ஏது முருகையா, இன்று நீ தோற்கவே இல்லையே” என்று பாலு கேட்டான்.

முருகையா பதில் பேசவில்லை. "அவன் தோற்க வேண்டுமா? ஜெயிததவன மிடடாய வாங்கித தரனும் என்று சொல்லுங்கள் அப்ப ஐயாப்பிள்ளை லாஸ்டிலே பஸ்டு