பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைபெரிய மனசு

எங்குநின்றாலும், எந்தக் கூட்டத்திடையே வந்தாலும், எப்படித் திரும்பி நின்றாலும் அதோ அந்தப் பெண் என்று என் மனம் கொக்கரிக்கக் கூடிய விதத்தில் அதன் உருவம் என்னுள் பதிந்திருந்தது.

விந்தையாகக் கண்டு களிப்பதற்கு ஏற்ற வேடிக்கை உருவமாகத்தான் அந்தச் சிறு பெண் விளங்கியது. என்றோ ஒருநாள் "லேடி கிராப்" ஆகக் கத்தரிக்கப்பட்டிருந்த தலை மயிர் ஒழுங்காக வளராமல் நெட்டையும் கட்டையுமாக அடர்ந்து கிடக்கும் பரட்டைத் தலை, அது வாரிவிடப்படாமல் எப்பொழுதும் சீர்குலைந்தே தோன்றும் அந்தப் பெண் குதித்து ஓடும்போது தலைமயிர் தனி நடனம் பயிலும், தலைமயிர் எப்படிக் காட்சியளித்த போதிலும், விசாலமற்ற அதன் நெற்றியிலே சற்று பெரிதாகவே தோன்றும் சாந்துப் பொட்டு, கொலுவிருக்கத் தவறுவதே கிடையாது. அழுத்தமான வர்ணங்கள் பெற்ற முரட்டுத் துணிச் சட்டையும் பாவாடையும்தான் அணிந்திருக்கும் அச்சிறுமி அழுக்கு முட்டிப்போனாலும் அது அம்பலமாகிவிடாது என்ற காரணத்தினாலேயே அத்தகைய துணிகளைப் பெரியவர்கள் அந்தச் சிறு பெண்ணுக்காகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பாவாடையும் சட்டையும் கூட சதா கட்டையானவை ஆகவே தோன்றும். பாஷன் என்றோ, குழந்தை வேகமாக வளர்கிறது என்றோ காரணம் கூறமுடியாது அதற்கு பெற்றோர் அல்லது கார்டியனின் சிக்கன நோக்கு தான் அடிப்படைக் காரணமாக இருக்க முடியும்.

வாழ்க்கை வசதிகளை வளமாகப் பெற்றிராத குடும்பத்திலே வளரும் குழந்தை அது. அதன் உருவமும் உடையும் இதை எடுத்துக்காட்டின. ஆனாலும் அது சந்தோஷம்ாகவே விளங்கியது. சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்கே வசதி செய்து தருகிற இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் களிதுலங்கும் முகத்தோடு காட்சி தருகிறவர்களைக் காண்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆகவே, ஆனந்த மயமான அச் சிறு உருவத்தை எனக்கு மிகுதியும் பிடித்திருந்தது. - - -

ஒரு ஒட்டலுக்குப் போய்வரும் பாதையிலும், அந்த ஓட்டலின் முன்னரும் அந்தப் பெண் அடிக்கடி தென்படும். பெரியவர்கள் யாருக்காகவேனும் மிக்ஸ்சர் அல்லது பக்கடா அல்லது வேறு ஏதாவது வாங்கிவர அது ஒட்டலுக்குள் பிரவேசிக்கும். அப்படி