பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கொடிது!

'ஏய், விளையாட்டில் ஜெயிக்கிறவன் மற்ற எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணும். ஆமா" என்று கத்தினான் ஆத்ம கிருஷ்ணன்.

ஆமா, ஆமோ ஆமா என்று கூப்பாடு போர்ட்டார்கள் மற்றவர்கள் முருகையா குதிக்கவுமில்லை; கூப்பாடு போடவுமில்லை. எனினும் அவனும் விளையாட்டில் கலந்து கொண்டான். . :

ஒட்டப் பந்தயம் மும்முரமாக நடந்தது. முருகையா தான் முதலில் வருவான் என்று அநேகர் எண்ணினார்கள். ஏமாந்தார்கள். எல்லோரையும் ஏமாற்றிவிட்டான் அவன். இரண்டாவதாகத்தான் அவன் வந்தான்.

"கொஞ்சம் மூச்சுப்பிடித்து ஒடியிருந்தால் நீ முதல்லே

வந்திருக்கலாம்.முருகையா என்று அவனுடைய நண்பன் சுந்தரம் சொன்னான்.

"நான் சுலபமாக முதலில் வந்திருக்க முடியும் மூச்சைப் பிடிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை" என்று அவன் உள்ளம் சொல்லியது. அவனுடைய உதடுகள் இறுக மூடிக் கிடந்தன. அவற்றிடையே அசட்டுச் சிரிப்பு கூட மின்கோடிட்டு மறையவில்லை. .

"முதல்லே வந்தால் எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணுமே என்று பயந்துவிட்டான் அவன். அதனால்தான் அவன் பின் தங்கிவிட்டான்" என்று குறும்பாக மொழிந்தான் பாலு. : - - அதில் உள்ள உண்மை முருகையாவின் இதயத்தைத் திருகியது. அவன் முகம் கறுத்தது. கூரிய கருமணிகள் நீந்தும் அவன் கண்கள் பனித்தன. அவனுக்கு அழுகை