பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

41


 இருக்கின்றன. இவை மனித திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் உதவுகின்றன.

அதனால்தான் பீட்டர் மார்ஷல் என்ற அறிஞர் கூறுகிறார். “எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது தனக்கில்லை. அதில் பெருமையும் இல்லை. எப்படி வாழ்ந்தோம்.எவ்வளவு நன்றாக வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.” எவ்வளவு அருமையாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.

பொழுது போக்கு அம்சம் வாழ்வின் வழியாக, வாழ்வின் சுவையாக விளங்குகிறது என்கிறார் J.B. நேஷ் என்பவர். விருப்பப்படும் ஏதாவது ஒரு செயலில், தன்னிச்சையுடன் ஈடுபட்டு அதிலே காண்கின்ற ஆனந்தமும் அமைதியும் தான் பொழுது போக்கு அம்சம் என்று பெருமையுடன் கூறப்படுகிறது.

பொழுது போக்கு அம்சம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுவையான காரியங்களாகும்.

இப்படிப்பட்டபொழுதுபோக்கு காரியத்தை ஐந்து வகையில் பிரித்துக் கூறுவார்கள் பெரியவர்கள்.

1. உருவாக்கும் பொழுதுபோக்குகள் : (Creative Recreation)

இதில் கலைகள், கவின்மிகுகைத்தொழில்கள் இசை, நாடகம், ஒவியம், கூடைமுடைதல், இலக்கியம் படைத்தல் போன்றவை அடங்கும்.

2. சுறுசுறுப்பான பொழுதுபோக்குகள் : (Active Recreation)

விருப்பப்படும் செயல்களில், தானே முழுமனதுடன் ஈடுபட்டு செயல்படுதல் என்பதே இதன் இயல்பாகும்.