பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

15


மரம் வெட்டுதல், விளைந்த கதிர் அறுத்தல் முதலியவற்றில் போட்டிகள் நடைபெற்று, உடலை வளர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றன.

இந்தியாவிலும் உடற்கல்வி இருந்தாலும், அது மனித இனத்திற்கு உதவுகிற நிலையில் இல்லாமல் ஒரம் போய் நின்றது. கண்ணுக்கும் கற்பனைக்கும் எட்டாத வேறொரு விண்ணுலக வாழ்க்கையை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த கூட்டம், ‘பக்தி மதம்’ என்ற போர்வையில் உடல் வளர்ச்சியை வெறுத்து ஒதுக்கிய ஊமை நாடகத்தால் நாட்டில் தீமைகள் பல தோன்றி, நிறைந்தன.

ஆமாம். இந்திய மக்களின் எழுச்சிக்கு இந்த வாழ்க்கை முறை இடைவிடாமல் தடைபோட்டுக் கொண்டு வந்ததுதான் இன்றைய நமது தளர்ச்சிக்கான காரணங்களில் தலையானதாகும்.

பழங்காலத்தில் மக்களைப் போருக்கு ஆயத்தப் படுத்துகிற பூரணமான பணியிலே உடற்கல்வி, சேவை செய்தது.

இடைக் காலத்தில் இருண்டகாலத்தில், இடம்பெற முடியாமல் போய் இடருற்ற உடற்கல்வி, மறைந்து விடவில்லை.

குளத்தில் நீர் இல்லாது வறண்டு போகின்ற காலத்தில் அங்கு வந்து வாழ்வு வெறும் பறவைகள், குளத்தை மறந்து பறந்து மறைந்துபோகும். ஆனால் அங்கே வாழும் ஆம்பல் மலர்கள் போன்ற பூ புல்லினங்கள் நீர் வறண்ட போது காய்ந்து, நீர் வந்தபோது வளர்ந்து செழித்துக் கொள்ளும்.