பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

79


உடற்கல்வியே உலகுக்கு வழிகாட்டும் உயர்ந்த தொழில் என்றால் அது உண்மைதான், இதற்கு வேறு விளக்கம் வேண்டியதே இல்லை.

உடற் கல்விக் கொள்கைகள்

1. மனிதர்களது செயல் திறனை வளர்த்து, வெளிப்படுத்துகிற சீரான சிறப்பியக்கச் சக்திகளை (Motor skills) இயக்கும் மேன்மையான முறைகளை உடற்கல்விக் கொள்கைகள் கற்றுத் தருகின்றன.
2.பல்வேறுபட்ட வயதுக் குழந்தைகளுக்கேற்ப, மனிதர்களுக்கேற்ப திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் வழிகளைக் காட்டுகின்றன.
3.மனித இயக்கத்தின் முறையான தன்மைகளை விளக்கி, அவற்றைப் புரிந்து கொள்ளும்படியாகவும், வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை உண்டுபண்ணி உதவுகிறது.
4.குழந்தைகள், மனிதர்கள் எந்த வழியெல்லாம் தங்கள் திறமைகளை, ஆற்றலை, ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டக் கூடுமோ, அப்படிப்பட்ட வாய்ப்புக்களை அளித்து உற்சாகப்படுத்துகின்றன.
5.கொள்கைகளில் எது நல்லது? எது ஏற்புடைத்த தல்ல? எது உண்மை, எது நன்மை என்பனவற்றை அறிந்து நடந்துகொள்ளும் அறிவைத் தந்து, நேர்வழியில் நடக்கத் துண்டுகின்றன.
6.மாறி வரும் உலகத்திற்கேற்ப, தங்களை மாற்றிக் கொள்ளும்படி, திட்டங்களைத் தீட்டவும் வேண்டாதனவற்றிலிருந்து விலகிக் கொள்ளவும் கூடிய பக்குவமான மனதைப் படைத்து விடுகின்றன.