பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. உடற்கல்வியின் கொள்கைகள் (Principles)


மனிதர்களும் கொள்கைகளும்

முற்கால மனிதர்களின் வாழ்வானது இயற்கையோடு இயைந்தது. இணைந்தது. இயற்கையினூடே அவர்கள் வாழ்வு இதமாக இயங்கிச் சென்றது.

இயற்கை ஏற்படுத்திய அழகை, அதிசயங்களை மனிதர்கள் வியப்போடு பார்த்தார்கள். வியந்து ரசித்தார்கள். புரியாமல் சில சமயங்களில் திகைத்தார்கள். இயற்கை கொடுத்த இன்னல்களை ஏற்று அவர்கள் பகைத்தார்கள். பகை முடிக்கவும் முயற்சித்தார்கள்.

இயற்கையை அவர்கள் தங்களுக்குத் துணையாகவும் வசதியாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்தார்கள். அவர்கள் துடிப்பும், ஆர்வப் பிடிப்பும், முயற்சிகளும் ஆயிரக்கணக்கான அனுபவங்களை அள்ளி அள்ளி வழங்கின.

இயற்கைச் சூழ்நிலையை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினர். அதிகமாக அதற்காக