பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உடற்கல்வி என்றால் என்ன?




1. பிறர் நலம் காத்தல் :

உடற்கல்வியின் திட்டங்கள், செயல்முறைகள் எல்லாமே மற்றவர்களுடன் எவ்வாறு ஒற்றுமையாக உள்ள நேசத்துடன் பழகுவது, பயன்பெறுவது என்பதை உறுதிப்படுத்தும் முறைகளிலேதான் அமைந்திருக்கின்றன. ஒருவரது திறமையை வளர்க்கும் போதும் சரி, உண்மையான விளையாட்டு நுணுக்கத்தை மிகுதிப்படுத்தும் போதும் சரி, மற்றவர்களை பாதிக்காமல், அபாயம் ஏதும் விளைவிக்காமல், லாவகமாக நடந்து கொண்டு, தங்கள் வெற்றியை பெற்றுக் கொள்ளும் பண்பான நலம் காக்கும் பயிற்சிகளையே உடற்கல்வி அளிக்கிறது.

2. அறிவார்ந்த அனுபவங்கள் :

உடற்கல்வி வழங்குகிற விளையாட்டுக்கள் யாவும் நிறைந்த அனுபவங்களை நல்கிக் காக்கின்றன. சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பன போன்ற நடைமுறைகளையெல்லாம் விளையாட்டில் விளையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அனுபவ அறிவை வளர்த்துவிடுகின்றன.

அதனால், சமூகத்தில் நலம் வாழ்ந்த வாழ்வு பெறுவதற்கான அறிவார்ந்த அனுபவங்களையெல்லாம், உடற்கல்வி சுகமாகத் தந்து விடுகிறது.

3. சேர்ந்து செயல்படுதல் :

ஒற்றுமையே வலிமை, சேர்ந்து செயல்படுவதே வெற்றி விளையாட்டில் அனைவரும் சேர்ந்து விளையாடுவது, ஒற்றுமையாக இயங்குவது, ஒரு லட்சியத்திற்காக ‘நான்’ என்பதை மறந்து, ‘நாம் என்று நினைந்து போராடுவது போன்ற வாய்ப்புக்களை உடற்கல்வி இனிதே வழங்குகிறது.