பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

51


சிறப்பு இன்னும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படாமலேயே இருந்து வருகின்றன.

ஆகவே உடற்கல்வியின் குறிக்கோள்களை உடற் கல்வியாளர்கள் உண்மையாக உணர்ந்துகொண்டிருக்கிற பொழுது, குழப்பவாதிகளின் விதண்டாவாதங்களைத் தீர்த்து தெளிவாக்குவதற்கும், குறிக்கோளை அடைகிற திட்டங்களை செம்மையாக செயல்படுத்தவும் வேண்டும் என்பதால் இனி குறிக்கோள்கள் எவை எவை என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

1. குறிக்கோள்கள்

1. உடல் உறுப்புக்களின் திறநிலை
2.தசைநரம்புகளின் ஒருங்கிணைந்த சிறப்பு இயக்கம்
3. பயன்மிகு ஒய்வு இயக்கம்
4.சிறப்பான ஆளுமையும் சமூகப்பண்பாடும்
5. சுகாதாரப் பழக்கங்கள்

இவற்றைவிளக்கமாகக் காணலாம்.

l.உடல் உறுப்புகளின் திறநிலை (Fitness organic vigour) உடல் உறுப்புக்கள் சீராகவும் சிறப்பாகவும், செயல்பட உதவுகிறது.

அதாவது சுவாச மண்டலம், இரத்த ஒட்ட மண்டலம்,கழிவு மண்டலம் போன்ற பல பகுதிகள் சீராக செயல்பட உதவுகிறது.

உடல் இயக்க செயல்களில் உன்னிப்பாக ஈடுபடுவதன் மூலம், உடலுக்கு வலிமை ஏற்படவும், உடல் உறுப்புகளுக்கு மிகுந்த வலிமை உண்டாகவும் ஏதுவாகிறது. இதன் முலம் உடற்பயிற்சி செயல்களில் ஈடுபடுபவ