பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

199


படிப் பட்ட நினைவுகள் அனுபவங்கள் மூலமாகவே தொடர்ந்து ஏற்படுகின்றன.

2. ஒப்புமை விதி (Law of Similarity)

ஒன்றை நினைத்தவுடன், அதே போல சாயலும், ஒத்தப் பண்பும் கொண்ட மற்றொன்று நினைவுக்கு வருவதைத்தான் ஒப்புமை என்கிறோம்.

மென் பந்தாட்டம் (SoftBall) என்று நினைத்தவுடன், தளப்பந்தாட்டம் (Base ball) நினைவுக்கு வருகிறது. கால்பந்தாட்டம் என்றதும், ரக்பி நினைவுக்கு வருகிறது. இதைத்தான் ஒப்புமை விதிக்கு உதாரணம் கூறுவார்கள்.

3. எதிர்மறை விதி (Law of Contrast)

ஒரு கருத்து நினைவுக்கு வருகிறபோது அந்தக் கருத்துக்கு எதிர்மாறான கருத்து நினைவுக்கு வருவது இயற்கைதான். இருள் என்றதும் ஒளியும், மேடு என்றதும் பள்ளமும், செல்வம் என்கிறபோது ஏழ்மையும், நன்மை என்கிற போது தீமையும் நினைவுக்கு வருவது இதற்கு சான்றாகும்.

தவறுகள் நிறைந்ததாக ஒரு போட்டி நடைபெறுகிறபோது சிறப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்று நினைவுக்கு வருவதையும் நீங்கள் நினைவில் கொள்ளலாம்.

4. முதல் ‘அனுபவ விதி’ (Law of primary)

முதலில் அதாவது முதல் நாளில் எந்தத் தொழிலிலும் ஏற்படுகிற முதல் அனுபவம் பற்றிய விதி இது. முதல் நாளில் பெறுகிற இன்பம் மறக்க முடியாத இன்பமாக வளர்வதுடன், நினைக்குந்தோறும் எழுச்சியை ஏற்படுத்தக்