பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

119




1. உயிர் வாழும் இயக்கங்கள்

உடலில் உள்ளே உறுப்புக்கள் இயங்காமற் போனால், உயிர்வாழ முடியாது என்பதுதான் இதன் முக்கியக் குறிப்பாகும். அதாவது இதயம் துடித்தல், சுவாசம் இழுத்தல், இரத்த ஒட்டம், போன்ற செயல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இதயம் பிழிந்து இரத்தத்தை இறைக்காமற் போனால், நுரையீரல்கள் காற்றை ஏற்றுக்கொள்ள இயலாமற் போனால், அந்த உறுப்புக்கள் இறந்துபோயின என்பது தானே அர்த்தம்!

இப்படிப்பட்ட இயக்கங்கள், செயல்கள் யாவும் தானே நடப்பவை. இயற்கையானவை, அவைகளுக்கென்று வெளிப்புற உந்துதல்கள் எதுவும் தேவையில்லை.

இத்தகைய உயிரான இயக்கங்களை நமது விருப்பத்திற்கு உட்படுத்தமுடியாது. வேண்டியபோது இயக்கலாம், வேண்டாதபோது நிறுத்தலாம் என்பது முடியாத காரியமாகும். இந்த இயக்கத்தையே அறிவியல் மொழியில் கூறுவது என்றால், உயிரியல் செயல் வெளிப்பாடு (Biological Reflex) என்று கூறலாம்.

உடல் நலம், உன்னத உடல் வளம் என்பதெல்லாம் இப்படிப்பட்ட உறுப்புக்களின் இதமான இயக்கங்களினால் ஏற்படுவதாகும். இந்த இயக்கங்கள் என்றும் எடுப்போடு நடைபெற வேண்டுமென்றால், அவைகள் வளர்த்துவிடும் இயக்கங்களின் வழிக்கு வந்தாகவேண்டும்.

2. வளர்த்துவிடும் இயக்கங்கள்

உறுப்புக்களை வளர்த்துவிடும் இயக்கங்கள், உயிர் வாழும் இயக்கங்களுக்கு நேர்மாறானது.இவ்வியக்கங்கள்