பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

உடற்கல்வி என்றால் என்ன?


வழங்குகிறது.அத்துடன், மனிதர்களது வாழ்வில் மண்டிக்கிடக்கும் அதிபயங்கரமான சூழ்நிலைகளிலிருந்தும் விடுவித்து வெளிக்கொண்டு வந்து, விழுமிய மகிழ்ச்சியையும் உண்டுபண்ணுகிறது.

இதையும் மறுத்து:-

இந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பும் மறுப்பும் ஏராளமாக வந்தன. அவற்றையும் இங்கே தொகுத்துக் காண்போம்.

குழந்தைகளை போலவே வயதானவர்களும் விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடுகின்றார்கள். அதாவது அவர்கள் தாங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற வறட்சிகரமான மகிழ்ச்சி சூழ்நிலையிலிருந்தும், சுவையற்ற வாழ்க்கையையும் மாற்றி அமைக்கவே அவர்கள் விளையாடுகிறார்கள் என்கிறார்கள்.

ஆனால், அதிகமாக குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கையில் கவலை, குழப்பம், துன்பம், சுவையற்ற சூழ்நிலை, கரைகடந்த கஷ்டநிலை என்றெல்லாம் இல்லையே! பின் அவர்கள் ஏன் அதிகமாக விளையாட்டில் ஈடுபடுகின்றார்கள்?

அதுவும் தவிர, குழந்தைகள் விளையாட்டில் பங்கு பெறுகிறநிலை, வயதாகிறபொழுது குறைந்துகொண்டே வருகிறதே? ஆகவே, இந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே உளநூல் அறிஞர்கள் உரைத்துவிட்டனர்.

4. புனர்வினை காெள்கை (Recapitulatory Theory)

பழைய அனுபவங்களையும், வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் நினைவுபடுத்தி, அவற்றைத் தொடர்ந்து