பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

உடற்கல்வி என்றால் என்ன?


 அமைகின்றது. எனவே, உடலுக்கான வயதைப் பற்றி பரிசீலித்துப் பார்க்கலாம்.

2. உடலுக்கான வயது

உடலுக்கான வயது என்பது உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியையும், அதனால் ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து முடிவு செய்கிற வயதாகும்.எக்ஸ்ரே மூலமாகவும், எலும்புகளைப் பரிசோதித்து அறியலாம்.

சில சமயங்களில், குழந்தைகளுக்கு முளைத்திருக்கிற பற்களின் எண்ணிக்கையை வைத்து, வயதைக் குறிப்பிடுவதும் உண்டு.

இவ்வாறு உறுப்புக்களை ஆய்ந்து வயதை உறுதி செய்வது அனுபவபூர்வமாக நடைபெறுவதுண்டு. இதன் வழி சரியான வயதைக் குறிப்பிட்டுக் கூறிவிட முடியாது. ஆனால், உடற்கல்வித்துறைக்கு இந்தப்பாகுபாடு நிறைய உதவும். எலும்புகள் அதிக வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகக் கடுமையான பயிற்சிகளை அளித்துவிடாதபடி எச்சரிக்கையுடன் பயிற்சிகள் அளிக்க இம்முறை உதவும்.

3. மனதுக்கான வயது

உடல் வளர்ச்சிக்கான வயதை (Physiological) பெண்கள் என்றால், பூப்பெய்திய காலத்திலிருந்து குறிப்பிடுவார்கள். பையன்கள் என்றால், அவர்களுக்கு மீசை, தாடி போன்ற முடி முளைக்கும் பருவத்தை அறிந்து குறிப்பிடுவார்கள். எப்படியிருந்தாலும், ஒவ்வொரு உடலிலும் உள்ள ஹார்மோன்கள் உற்பத்தி அளவிலும், அதற்கேற்ற அளவில் உறுப்புகள் வளர்ச்சியும் அமை