பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

165


பித்து, வாழ்கின்ற வருடத்தின் எண்ணைக் கூறி கழித்துக் காட்டுவார்கள். அது மட்டுமா வயதுக்கு வரம்பு? வேறு பலவும் உண்டே? அப்படிப் பிரிக்கும் போது, பிறந்த வயதுகள் தாம் மூன்றாக இருக்கின்றது.

1. காலண்டர் வயது. (Calender Age)
2. உடலுக்கான வயது (Anatomical Age)
3. மனதுக்கான வயது (Mental Age)

1. காலண்டர் வயது

பிறந்த குழந்தை ஒன்று வளர்கிறது. சிறுவர் என்று மாறி, இளைஞராக உருவாகி, முதியவர் என்று மாறி காலத்திற்கேற்ற பெயர்களைப் பெற்று, உலகை விட்டு மறைந்துபோகிறது.

வயது தான் இப்படி வடிவத்தையும் உருவத்தையும் மாற்றிக் கொண்டு போகிறது. ஒருவரது வயதை வைத்துதான், அவரது பண்புகளையும், குணாதிசயங்களையும், வரம்புகளையும் நிர்ணயித்துக் கூறுவது உலக வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், காலண்டர் வயதை வைத்துக் கொண்டு, மக்களைப் பிரித்துவிடமுடியாது. ஒரே வயதுள்ளவர்கள் கூட, வெவ்வேறு வித்தியாசமான வகையில் வளர்ந்திருப்பார்கள், சிலர் வளர்ச்சி குன்றியிருப்பார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி கூறுவதுபோல, மக்கள் வளர்ச்சி வித்தியாசமான தன்மையிலே அமைந்திருக்கிறது. உடலின் உறுப்புக்கள் கூட, வேறுபட்ட அளவில் வளர்ச்சியைப் பெறுகின்றன. ஆகவே, பிறந்த தேதியை வைத்துக் கொண்டு, மக்களைப் பிரிக்க முயல்வது, அனைவராலும் அங்கீகரித்திட முடியாத சான்றாக