பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

உடற்கல்வி என்றால் என்ன?


முன்னாள் அறிஞர்கள், உடல் என்பது வேறு, மனம் என்பது வேறு என்று தனித்தனியாகப் பிரித்துக் கூறினர். மனத்தைப் பற்றியே அதிகமாக ஆராய்ந்தனர். பேசினர்.

ஆகவே, பரிமாற்றக் கொள்கைகளில், மனத்தின் இயல்புகள் பற்றியும், அவற்றின் பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்து, பல்வேறு விதமான கொள்கைகளைக் கூறிச்சென்றனர். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தெரிந்து கொள்வோம்.

1. மனத்தின் நுண்பிரிவுக் கொள்கை (Theory of Faculty)

இக்கொள்கையானது, மனத்தின் மாண்பு மிகு அறிவுப் பகுதிகளை விரித்து, விளக்கிக் கூறுவதாகும். அதாவது மனம் என்பது, பல்வேறு அறிவு நுணுக்கப் பகுதிகளில் ஆட்பட்டதாக விளங்குகிறது. அதை காரணமறியும் திறன் (Reasoning); நினைவாற்றல்,(Memory); எண்ணுதல் (Thinking); கவனம் காெள்ளுதல் (Attention); நியாயத்துடன் நிலை உணர்தல் (Judgement); உன்னிப்பாக ஊன்றிப்பார்த்தல் (Perception).

மேலே கூறிய மனப் பண்புகள் யாவும், ஒன்றுக் கொன்று தொடர்புள்ளது போலவும், தனித்தன்மை கொண்டது போலவும் நமக்குத் தெரியும். ஆனால், அண்டம் என்பது முழுமையானதாகவும், அதனுள்ளே பல்வேறு உலகப் பிரிவுகள் பிண்டம் என்று பிரிந்து சூழ்ந்திருந்து. ஒன்றாக இயங்குவது போலவும், மனப் பிரிவுகள் செயல்படுகின்றன.

ஆனால் இக் கொள்கையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக, காரணம் அறியும் மனம்