பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

193


 போலவே, குழந்தைகளின் வலிமையை, திறமையை முதலில் அறிந்து கொண்டு கற்பிப்பது அவசியம்.

குதிரையைத் தண்ணிர்த் தொட்டி வரை கூட்டிச் செல்ல முடியும். குடிப்பது குதிரை தானே! அதுபோலவே, குழந்தைகளுக்குக் கற்றுத்தர முடியும். எவ்வளவு துரம் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆகவே, உடற்கல்வி ஆசிரியர்கள் கற்றுத்தர இருக்கின்ற திறன்களை, செயல்களை, அவர்கள் விரும்பி ஏற்பதுபோல முதலில் விளக்கி, ஏற்கின்ற ஆயத்த நிலையை ஏற்படுத்தி விடவேண்டும். அதன் பிறகு அந்த செயலால் என்ன பலன் ஏற்படுகிறது என்ற முடிவையும், மேற்கொள்கிற இலட்சியத்தையும் விளக்கிவிடவேண்டும். அதன்பின் எப்படி அதை சிரமமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுத் தருவது.குழந்தைகளுக்கு வெறுப்பேற்றாமல், அலுப்பினை உண்டாக்காமல், திறமையாகச் செய்திட உதவும்.ஆகவே, கற்றலில் ஆயத்த நிலை என்பது முதல் தரமான முதல் விதியாகும்.

அ)

2. பயன்தரு நிலை விதி (The law of effect)

ஒரு செயலில் ஈடுபடும்பொழுது, அதன் முடிவு மகிழ்ச்சியை அளிக்கிறதா, துன்பத்தைத் தருகிறதா என்பதைப் பொறுத்தே, அதில் விருப்பும் அல்லது வெறுப்பும் ஏற்படுகிறது.

மகிழ்ச்சி ஏற்படுகிறபொழுது செயல்படவும், மீண்டும் தொடர்ந்து உழைக்கவும் விருப்பம் ஏற்படுகிறது.

துன்பமும் வலியும் வேதனையும் ஏற்படுகிறபோது, செயல்படுவதில் ஆர்வம் குறைகிறது. வெறுப்பு மேலிடு