பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

உடற்கல்வி என்றால் என்ன?


கிறது; செயலை புறக்கணிக்கும் சிரத்தை மேலோங்குகிறது.

ஆகவே, இந்தவிதி விளக்குவதாவது: திருப்தி அளிப்பது அல்லது எரிச்சலூட்டுவது என்ற பயனை அளிக்கிற செயலைக் கற்பிப்பது. இப்படி ஏற்படுகிற முடிவானது பரிசைப் பெறுவதாக இருக்கக்கூடும். அல்லது தண்டனை தரத்தக்கதாக அமைந்து விடுவதும் உண்டு.

எனவே, ஒரு குறிப்பிட்ட பயனைக் கொடுக்கிற காரியம், திருப்தியை உண்டாக்கும். அந்தத் திருப்தியே அதிக ஆர்வத்தை உண்டாக்கும். குழந்தைகள் எப்பொழுதும் குதுகலமான சூழ்நிலையையும், களிப்பு தருகின்ற காரியங்களைச் செய்யவுமே விரும்புவதால், அவர்களுக்குத் தேவையான, திருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கின்ற காரியங்களையே தந்திட வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள், இவ்விதியை மனதில் கொண்டு, குழந்தைகள் விரும்புகின்ற, விருப்பமான செயல்களையே கற்பிக்க வேண்டும். சுவையான விளையாட்டுக்களை அல்லது பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கிற ஆசிரியர்களின் பக்குவ நிலையைத் தொடர்ந்து, குழந்தைகளுக்குரிய விருப்பத்தில் பல புதிய திருப்பங்களை உண்டு பண்ண முடியும்.

குழந்தைகளுக்குப் பயம் ஏற்படாத வகையிலும்; ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ, காயம்பட்டுவிடுமோ என்ற அச்சம் சூழாத தன்மையிலும், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்க முனைகிற விதங்களில் ஆசிரியர்கள். செயல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே