பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

உடற்கல்வி என்றால் என்ன?


2. உழைப்பும் உறுதியும்

உழைப்பில் ஆர்வமும், உள்ளத்தில் உறுதியும் ஒரு தலைவனுக்கு இரண்டு கண்கள் போல. அதாவது தலைவன் என்பவன் “கஷ்டப்படுவதற்கு இஷ்டப்பட வேண்டும்”. ஒரு காரியத்தை செய்கிறபோது, தடைகள் வரும். தடங்கல்கள் நேரிடும்.இடையூறுகள் எதிர்ப்படும். ஆபத்துகள் கூட அடுத்தடுத்து நடக்கும்.

அவற்றிற்கெல்லாம் அஞ்சாமல், தைரியமாக சந்திக்கும் சாமர்த்தியம், தன்னைத் தொடர்கிறவர்களையும் துணிவோடு முன்செல்ல வைக்கும் வண்ணம் துண்டுகிற சாதுர்யம், மற்றவர்களைவிட மிகுதியாக உழைக்கும் உடல் வலிமை, துன்பங்களைத் தன்மேல் சுமத்திக் கொள்கிற மனத்துணிவு.

இவையெல்லாம் கற்றுக் கொள்வதால் மட்டும் வருகிற திறமைகள் அல்ல. பிறவியிலே பெற்று வருகிற பேறுகள். பரம்பரைப் பண்புகள், இப்படிப்பட்ட குணங்களைத்தான் உடற்கல்வித்துறையும் எதிர்பார்க்கிறது.

உடற்கல்வி தலைமை நிர்வாகி என்பவர், வெறும் வாய் வார்த்தைகளால் வருணித்து விடுவதால் மட்டும் எந்தப்பயனையும் ஏற்படுத்திவிடமுடியாது. சொல்வதைச் செய்து காட்டும் திறன்தான், பின்பற்றும் மாணவர்களைப் பெரிதும் கவரும். தாங்களும் செய்திட வேண்டும் என்ற துணிவைத் துண்டும். செய்து பார்த்து மகிழ சிந்தையும் விரும்பும்.

கஷ்டமானது என்று கருதி, கைவிட்டு விடலாம் என்று கைகழுவ நினைக்கும் காரியத்தை, பொறுமையாக இருந்து திறமையாகச் செய்ய முயற்சிக்கிறபோது,