பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

உடற்கல்வி என்றால் என்ன?


பெற்று ஏற்படுத்துகிற வினைகளால், உடலியக்கத்திலும் மன இயக்கத்திலும், மாறுபட்ட செயல்களை உருவாக்கி மன சிலிர்ப்பினை துரிதமாக ஏற்படுத்துகின்ற காரியம்” என்று யங் என்பவர் விளக்குகிறார்.

“உணர்ச்சிகள் என்பவை உடலோடு பிறந்தவை. குழப்பமான சூழ்நிலைகளில், உடல் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டு, அந்தந்த நிலைமைக்கேற்ப தங்கள் எதிர்ப்பையும் இணக்கத்தையும் வெளிப்படுத்துகின்ற தன்மையே உணர்ச்சிகளாக அமைகின்றன. அத்தகைய உணர்ச்சிகள், சுரப்பிகள், வயிற்றுப் பகுதிகள், மற்றும் நரம்புப் பகுதிகள் இவற்றினிடையே மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. இப்படி ஏற்படுகின்ற மாற்றங்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களுக்கிடையே வித்தியாசமாக நிகழ்வதும் உண்டு” என்று சேண்டிபோர்டு என்ற அறிஞர் விளக்குகிறார்.

ஆகவே, உணர்ச்சிகள் என்பவை இயற்கையாக உடலோடு பிறந்தவை. அவை குறிப்பிட்ட ஒரு அமைப்போடுதான் இயங்குகின்றன. அவை உடல் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுகின்றன. அவை உடல் இயக்கமாகவே மாறி விடுகின்றதன். மூலம், உடலைப் பாதுகாக்கும் எதிர்வினைச் செயல்களாகவே வருகின்றன என்று நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

உடற்கல்வி ஆசிரியர்கள்:

உடற்கல்வி ஆசிரியர்கள் உணர்ச்சிகள் பற்றிய முக்கிய குறிப்பு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சிகள் என்பவை வெளியேயிருந்து உடலுக்குள்ளே வந்து விழுந்து விடுவதில்லை. அவை உடலுக்