பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

127


காரணம் கூறுவார்கள். அது தான் உண்மை. அறிவோடு கடைபிடித்திடல் வேண்டும்.
13. கல்வியும், கற்றலும் ஒருவருக்கு அதிக வளர்ச்சியை அளிக்கிறது. அதிகமாகக் கற்றுக் கொள்ளும் அறிவும், திறமைகளும் ஒருவரை சிறந்த வளர்ச்சிக்குரியவராக மாற்றுகின்றன.

குழந்தைப் பருவத்தில் விளையாட்டுக்கள் குதுாகலமான வளர்ச்சிக்கு வழியமைத்து விடுகின்றன. சத்தில்லாத உணவுடன், சமத் காரமான உடற்பயிற்சிகள் இருந்தால், வளர்ச்சியில் சரிவும் தேக்கமும் ஏற்பட ஏதுவாகின்றன.

ஆகவே, உணவும் உடற்பயிற்சியும் மட்டும் ஒருவருக்கு ஆற்றலை அளித்திட முடியாது.உடல், அமைப்பும் நன்றாக இருந்திட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

உடல் அமைப்பு பற்றியும் அதன் உயர்ந்த செயலாற்றும் திறமைபற்றியும் தொடர்ந்து காண்போம்.

உடல் அமைப்பும் செயலாற்றலும்

மனிதர்களுக்குரிய மெருகேறியதேகம் ஒரே நாளில் கிடைத்தவை அல்ல. அது பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியினால் பிறந்ததாகும்.

நான்கு கால்களால் நடக்கும் மிருகங்களுக்கு மாறாக, இரண்டு கால்களால் மனிதன் நடக்கிறான். அவனது தோற்றம் சிறந்த அமைப்பு பெறுவதற்கு, அவன் நிமிர்ந்து நிற்கும் தோரணை தான் காரணம்.

நிமிர்ந்து நிற்கும் மனித தேகத்தின் எடையை இரண்டு கால்களும் தாங்கிக் கொண்டிருப்பதால்,