பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

உடற்கல்வி என்றால் என்ன?


 கால்களுக்கு நல்ல வலிமை வேண்டியிருக்கிறது. அது போலவே கைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தால், நிறைய வேலைகள் செய்யும் கைகளும், வேண்டிய வலிமை கொண்டனவாக விளங்க வேண்டியிருக்கிறது.

ஆகவே மிருகங்கள் உடலமைப்புக்கு ஏற்றபடி நடக்கின்றன. வேலைகளைச் செய்கின்றன. மனிதனும் அப்படியே தன்உடல் அமைப்புக்கு ஏற்ற பணிகளை செய்கிறான்.

ஒவ்வொரு மனிதனின் உடலமைப்பும் அவனது பெற்றோர்களின் உடலமைப்புக்கு ஏற்றாற்போல் அமைவது இயற்கையானதாகும். சில சமயத்தில் பரம்பரைத் தோற்ற அமைப்புகளும் இடையில் புகுந்து விடுவதுண்டு. அதனால் மனிதர்கள் இடையில் பலதரப்பட்ட தேக அமைப்புக்கள் உண்டாகிவிடுகின்றன.

பெருத்த உடல் அமைப்பு, கனஎடை உள்ள மனிதர்களும், ஒல்லியான, சுமாரான உடல் எடை கொண்ட மனிதர்களும் இருக்கின்றார்கள். பெருத்த உடல் கொண்ட மனிதர்கள் இயக்கத்திற்கும், ஒல்லியான மனிதர்களின் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிந்ததே.

ஆகவே, உடல் எடைக்கும், பருமனுக்கும் ஏற்றவாறு சீரான சிறப்பு இயக்கங்கள் (Motor Development) மாறுபடுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் எடை உள்ளவர்களின் இயக்கத்தில் உள்ள வேற்றுமைகள் போலவே, ஆண்கள் பெண்கள் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன.

அதனால்தான் உடலமைப்பானது செயல்முறைகள் பற்றி தீர்மானிக்கிறது. ‘முடிவெடுக்கிறது’ (Structure Decides Function) என்கிறார்கள்.