பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

விளையாட்டுச் சிந்தனைகள்


எவ்வளவு சக்தி படைத்தவைகளாக விளங்குகின் றன!

stúun. நினைக்கிருேம் நாம்?

நமது தமிழ்ச் சித்தர்கள் அக்காலத்தில் தேகத் தைத் தெய்வம் வாழும் திருக்கோயில் என்று போற்றிப் பாடினர்கள். இடையிடையே ஒரு சில சித்தர்கள், உடிலை மிகத்தாழ்ந்த நிலையில் எண்ணிட வேண்டும் என்று எண்ணி, அவ்வப்போது பலபடக் கூறினர்கள். பாருங்கள்.

ஆங்காரப் பொக்கிஷம். கோபக்களஞ்சியம். ஆணவ அரண்மனை. பொய் வைத்தக் கூடம். பொருமைப் பெருமதில். காமவிலாசம். கந்தல் கடிமனை. காற்றுத்துருத்தி. ஊற்றைச் சடலம். ஒட்டைத்துருத்தி. உடிையும் புழுக்கூடு. ஊன் பொதிந்த காயம்.

இப்படியெல்லாம் நாம் ஏன் நினைக்க வேண்டும்?

சற்று மாற்றி, வேறு விதமாக அழகாகவும் அருமை யாகவும் அழைக்கலாமே!

தெய்வம் வாழும் இல்லம்; திறமையூறும் தேன் நிலம். தென்றல் தவழும் சுந்தரப் பூங்கா. கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தரு. வளமை பொழியும் வல்லாளர் பூமி. சொர்க்கத்தைக் காபி டும் சுந்தரத் தோழன்.

கேட்க நன்ருக மட்டும் இல்லை-மனதுக்கு சுக மாகவும் இருக்கிறது. உடலே இவ்வாறு பயன்படுத திக் கொள்வோமே!