பக்கம்:தேன் சிட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தேன் சிட்டு



சாதி, சமயம், நாடு, நிறம் என்றெல்லா, எத்தனை எத்தனையோ குறுகிய வரம்பிட்டு மானிட சாதி சிதறுண்டு தன்னல ஆதிக்கத்தால் மயங்கி விடுகின்றது. அம்மயக்கத்தின் விளைவாகப் போல் தாண்டவமாடுகின்றது; துன்பம் தலை விரித்தாடு கின்றது. மனிதன் விலங்காகிவிடுகிறான். அவனுடைய அன்பு, இரக்கம், அருள் போன்ற மென்மை உணர்ச்சிகள் மறைந்து விலங்கு உணர்ச்சிகள் மேலோங்கிவிடுகின்றன. அவன் கீழ்த் தர விலங்கி லிருந்து பரிணாமக்கிரமத்திலே தோன்றியவன் என்பதற்கு அத்தாட்சியாக அவனுக்கு உருவம் வேறு பட்டிருந்தாலும், இன்னும் விலங்குக் குணங்கள் இருக்கின்றன என்று காண்பிப்பதுபோல அந்த உணர்ச்சிகள் ஆதிக்கம் பெற்று அவனை விலங்காக்கிப் பேயாட்டம் ஆடுகின்றன.

உலகமே நடுங்கும்படியாக ஒரு பெரும்போர் 1914-ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனால் உண்டான துன்பங்களைக் கண்டபோது, 'இனிப் போரே வேண்டாம்; போர் ஒழிக’ என்று மனிதன் முழங்கிகினான். ஆனால் அந்த நல்லெண்ணம் நெடுநாள் நீடித்திருக்கவில்லை. மனிதன் அதனை மறந்துவிட்டான். மறுபடியும் ஒரு பெரும்போர் முன்னதைவிடக் கொடுமை நிறைந்ததாகத் தோன்றி உலகத்தை ஆட்டியது. அழிவுப் படைகள் பயங்கரமாகப் பெருகின. உலகத்தையே அழிக்கக்கூடிய வல்லமையோடு அனுப்படையும் ஹைடிரஜன் படையும் தோன்றிவிட்டன. இனிமேல் போர் வந்தால் உலகமே அழிந்து போகும். மனித வருக்கமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/31&oldid=1142849" இலிருந்து மீள்விக்கப்பட்டது