பக்கம்:தேன் சிட்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தேன் சிட்டு


ளட்டும். எனக்கு அதில் அக்கறையில்லை. இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

திருமூலருடைய கருணை உள்ளம் என்னைப் பெரிதும் கவர்கிறது. மாடுகளின் துன்பத்தைக் காணச் சகியாமல் அவர் அத்துன்பத்தைப் போக்க முன்வந்திருக்கிறார். அதற்காக எத்துணைப் பெரிய தியாகத்தையும் செய்ய அவர் பின்வாங்கவில்லை.

அன்பு என்பது எல்லாவிதமான வரம்புகளையும் உதறித் தள்ளிவிட்டு மேலெழுகின்றபோது சத்திய வடிவனை இறைவனே அடைகின்றது என்று கபீர் தாசர் பாடுகிறார், 'அன்பே சிவம்' என்று திருமூலர் அருளியிருக்கிறார். அன்பையும் இறைவனையும் அவர் ஒன்றாகவே காண்கிறார்.

""அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்"

என்று அவர் அன்பின் பெருமையைப் பாடியிருக்கிறார்.

நமது நாட்டுப் பெரியோர்கள் மற்றொரு பெரிய உண்மையை வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா உயிர் களிலும் இறைவன் உறைகின்றான் என்பது அந்த உண்மை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று விரிவுபடுத்தியும் இதைக் கூறலாம்.

என்னுடைய உள்ளத்தை இறைவன் கோயிலாகக் கொண்டிருக்கிறான். ஆனால் நான்தான் அதை உணர்ந்து கொள்ளவில்லை. அதற்கு வேண்டிய பக்குவத்தை நான் அடையவில்லை. என்னுள்ளே இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/67&oldid=1155349" இலிருந்து மீள்விக்கப்பட்டது