பக்கம்:தேன் சிட்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிக்கோள்

71


கிருஷ்ண பரமஹம்சர் ஒர் அழகான கதை சொல்லியிருக்கிறார்.

ஒரு கிராமத்திற்குப் பக்கத்திலே ஓர் ஆச்ரமம் இருந்தது. அதில் தங்கியிருந்த சாதுக்களில் ஒருவர் சாலை வழியாக எங்கோ போய்க்கொண்டிருந்த போது ஒரு ஜமீன்தார் ஏழை ஒருவனைச் சாட்டையால் அடிப்பதைக் கண்ணுற்றார். அவரால் அதைச் சகிக்க முடியவில்லை. 'அடிக்க வேண்டாம்' என்று பரிவோடு ஜமீன்தாரைக் கேட்டுக்கொண்டார். ஜமீன்தாருக்கு முன்னிலும் அதிகமான கோபம் அந்த சாதுவின் மேல் பொங்கி எழுந்தது. அந்த ஏழையை விட்டுவிட்டுச் சாதுவின் மேல் பாய்ந்தார். சாட்டையால் அவரை அடித்து நொறுக்கினார். சாது மூர்ச்சையுற்றுப் பிணம் போலத் தரையிலே விழுந்தார்.

மூச்சின்றிப் பேச்சின்றிக் கிடந்த சாதுவை யாரோ கண்டு, அவர் நிலைமைபற்றி ஆச்ரமத்திலுள்ள மற்ற சாதுக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அவர்கள் ஒடோடியும் வந்து மூர்ச்சையுற்ற சாதுவைத் தூக்கிக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும்பினார்கள்.

ஆச்ரமத்திலே ஒரிடத்திலே அவரைப் படுக்க வைத்தார்கள். அப்பொழுதும் அவருக்கு உணர்வு வரவில்லை. அதனால் கவலையடைந்த சாதுக்கள் பல வகையான சிகிச்சைகள் செய்யத் தொடங்கினார்கள்.

ஒருவர் அந்த சாதுவின் தலையைத் தம் மடியின் மேல் வைத்துக்கொண்டு மெதுவாக வாயில் கொஞ்சம் பாலை ஊற்றினார். மெதுவாக சாது கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/72&oldid=1154611" இலிருந்து மீள்விக்கப்பட்டது