பக்கம்:தேன் சிட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தேன் சிட்டு


னுடைய விருப்பு வெறுப்பு, கட்சிக் கொள்கை, சமயப்பற்று எல்லாம் படங்களிலே சாயல் காட்டும்.

ஆனால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது எனக்கு இங்கே நோக்கமல்ல. என் வீட்டுச் சுவர்களிலும் சில படங்கள் தொங்குவதில் தனிப்பட்ட ஆச்சரியம் ஒன்றுமில்லை என்பதை மறை முகமாக வெளிப்படுத்தவே நான் முயற்சி செய்கிறேன்.

படிப்புக்கும் எழுத்து வேலைக்கும் பயன்படும் எனது மேஜைக்கு முன்னால் புத்தருடைய திருவுருவத்தை நான் தொங்கவிட்டிருக்கிறேன். படத்தைச் சுவரோடு ஒட்டினாற்போல வைப்பது அத்தனை அழகாயிராது என்பது என்னுடைய எண்ணம். படத்தின் கீழ் விளிம்பு சுவரைத் தொட்டுக் கொண்டும் மேல் விளிம்பு முன்னால் சற்று சாய்ந்தும் இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

புத்தர் தமது தோள்களிலே ஒரு நொண்டி ஆட்டைச் சுமந்துகொண்டு அன்பு மயமாகக் காட்சி தருகிறார். விசாலமான அவருடைய கண்களிலே கருணை ஒளி வீசுகிறது. இதழ்களிலே சாந்தியின் புன்முறுவல், பிம்பிசாரன் செய்யும் யாகத்திலே பலி யிடுவதற்காக ஒட்டிச் சென்ற ஆடுகளிலே ஒன்று கால் ஊனமாகி நடக்கமாட்டாமல் நொண்டி நொண்டி வருந்தியது. அதைத் தற்செயலாகக் கண்ணுற்ற புத்தர் அந்த ஆட்டைத் தூக்கிக்கொண்டு நடக்கலானார். அன்பு வழிக்கு அரசனை மாற்றச் செல்லும் புனித யாத்திரை தொடங்குகிறது. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/61&oldid=1154602" இலிருந்து மீள்விக்கப்பட்டது