பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஜீ குன்றக்குடி அடிகளர்

வாழ்க்கையை உருவாக்கும். இம்மண்ணுலக வாழ்க்கை அமைதியாக நடைபெறச் சமயமும் தேவை; கலைகளும் தேவை. இனி எதிர்வரும் காலத்திலும் இன்பம் தழுவிய வாழ்க்கையை அமைக்கச் சமயமும் தேவை; கலைகளும் தேவை.

கலைகளில் முதலில் தோன்றியது கூத்து. மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூத்துத் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தம்முடைய உணர்வுகளை நினைத்திடும் பொருட் குறிப்பை, முதன் முதலில் அங்க அசைவுகளால்தான்் புலப்படுத்தினர். அதுவே காலப்போக்கில் கூத்தாயிற்று. இக்கூத்திலிருந்து தான்் நாட்டியம், நாடகம், திரைப்படம் முதலிய கலைகள் தோன்றின. தமிழரின் தலைசிறந்த வழிபாட்டுத் திருவுருவம் ஆடல்வல்லான் திருவுருவம்! வழிபாட்டுத் திருவுருவங்களில் பழமை சான்றதும் எழில் வாய்ந்ததும், இன்பம் அளிப்பதும் ஆடல்வல்லான் திருவுருவமே!

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்

மேனியில் பால்வெண் ணிறும் இனித்த முடைய எடுத்தபொற்

பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே

f த்தே!” - - இந்த மாநி லத்தே (நான்காம் திருமுறை - 783)

என்று அப்பரடிகள், ஆடல்வல்லானைப் போற்றிப் புகழ்ந்து

மகிழ்ந்தது இங்கு நினைவுகூரத் தக்கது. தமிழரின் வழிபடும் தெய்வங்களில் சிறப்புடைய சிவம், சக்தி இருவருமே