பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 குன்றக்குடி அடிகளார்

களின் நடைமுறைகளும் உணர்த்துகின்றன; வரலாறுகளும் உணர்த்துகின்றன. பல சிவாலயங்களில், சிவாச்சாரிய மரபினர் அல்லாதவர்களும், சிவாகம முறைப்படி தீக்கை முதலியன பெறாதவர்களும் கூட அமர்த்தப்பெற்றுள்ளனர். சான்றாக, திருவானைக்கா, திருப்பெருந்துறை, சிதம்பரம், இராமேச்சுரம், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களைக் குறிப்பிடலாம். ஏன்? ஆகமத்தில் உயிர்ப்பலியிடுதல் சொல்லப் பெறுகிறது. ஆனால், அரசின் உயிர்ப்பலி தடைச் சட்டம் அதனை தடுத்து விடவில்லையா? திருக்கோயில் களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாதென்பது ஆகமத்தின் விதி. ஆனால் மெய்கண்ட சாத்திரங்களும் திருமுறைகளும் இதை மாற்றித் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கியுள்ளன. அப்பரடிகள் அருள் வாக்கு" நினைக்கத்தக்கது. இக்கருத்தை அரண் செய்யும் வகையில் மாதவச் சிவஞான முனிவர் அருளிய வாக்கும்" எண்ணத்தக்கது. பெற்றான் சாம்பானுக்குத் தீக்கா செய்த உமாபதி சிவத்தின் அருளிப் பாடும் நினைக்கத் தக்கது. ஆயினும் உழுதசால் வழிச் செல்லும் நம்மவர்கள் திருமுறை நெறியையும் மெய்கண்ட நெறியையும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை. ஆதலால் நமது சுதந்திர இந்திய அரசு, ஆலயப் பிரவேசச் சட்டம் செய்தது. இது சிவாகமங்களுக்கு விரோதமானதுதான்். இதனை நாம் ஏற்காமல் இல்லை. இங்ங்னம் தாழ்த்தப்பெற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்ததால் - "திருவருள் பொலிவு (சாந்தித்யம்) குறைந்து இருக்கிறது" என்று சிலர் கூறுவது சரியன்று. இறைவன் எஞ்சாத பூரணம், குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அதற்கு எப்படிக்குறை வரமுடியும்? இது சொல்வாருடைய மனப்போக்கின் கருத்தேயாம். சாதாரணக் காவிரியே,