பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் 鹽 63

திருக்கோயிலை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! இத்தகைய நடைமுறைகளில் திருக் கோயில்கள் இயங்கிய போதும், நமது சமுதாய மக்கள் வளர்ந்த போதும் வாழ்க்கை இன்பமாக இருந்தது. திருக் கோயில்களும் உயிர்ப்புடன் அருள் நிலையங்களாக விளங்கின. இன்று, அவை பண்டைய மாட்சியுடன் விளங்கவில்லை என்பது வெளிப்படையான-கசப்பான உண்மை. இந்த நிலை மாறினால் தமிழகம் புத்துயிர் பெறும்; புதிய வரலாறு படைக்கும்; கலைகளும் செழித்து வளரும்.

தாயாகிக் குழந்தை வளர்த்தல் ஒரு நுண்ணிய கலை. இன்று தாயர் பலர் குழந்தைகளை முறையாக வளர்ப்ப தில்லை. ஒரு தாய் எங்ங்னம் பாலூட்டி, எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சீர்காழியில் எழுந்தருளியுள்ள திருநிலைநாயகி ஓர் எடுத்துக்காட்டாவாள். குழந்தை அழு கிறது. அவள் தாய்! நான்கு சுவர்களுக்கிடையில் இருக்கும் தாயல்லள் ! அண்டத்திற்கு எல்லாம் தாய்! அதனால் யாருடைய குழந்தை, எந்தக் குழந்தை என்ற வினாவிற்கு இட மில்லை. பிறந்த குழந்தைகளெல்லாம் பாலுண்டு வளர வேண்டுமல்லவா? அவள் அருளின் வடிவு! ஆதலால் பாலூட்டுகிறாள். சாதாரணமாகப் பாலூட்டினால் குழந்தை யின் ஊனுடல் வளரும்; உயிர் வளராது. ஆதலால், திருஞானத்தையும் பாலிற்குழைத்துாட்டினாள்! இது தாய்க் குலத்திற்கோர் எடுத்துக்காட்டு! அவர்கள் முறையாகக் குழந்தைகளை வளர்க்கவேண்டும்; பாலூட்டி வளர்க்க வேண்டும். உடன் சிறந்த அறிவையும் தந்து வளர்க்க வேண்டும். தாய்மைக் கலைப் பயிற்சிக் கூடம் சீகாழி. அதன் பேராசிரியை திருநிலை நாயகி, முதல்வர் பிரமபுரீச்சுரர்;