பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ; 101

கிடையில் வேற்றுமை மிகுதியும் உண்டு. ஆயினும் பெரும் பான்மையான மானிடச் சிக்கல்கள் உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியாகத்தான்் இருக்கின்றன. காலந்தோறும் கூட மிகச் சாதாரண மாற்றங்கள் தாம் ஏற்படுகின்றனவே தவிர அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கண்ட பாடில்லை. இரண்டு பொதுவுடைமை நாடுகளுக்கிடையே கூடச் சிக்கல்கள் நிலவுகின்றன. ஆதலால் காலத்தின் வளர்ச்சி, பெளதிக வளர்ச்சிகளை, மாற்றங்களை உண்டாக்கி யிருக்கிறதே தவிர, மானிட சாதியின் அகநிலை-புற நிலையில் பெரிய மாற்றங்களைக் காணோம். இன்றுள்ள சூழ்நிலையில் இவ்விரண்டு தத்துவங்களையும் நன்றாக ஆய்வு செய்து இவற்றுக்கிடையேயிருக்கிற முரண்பாடுகளைத் தவிர்த்துச் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் நல்லது என்ற கருத்திலேயே இந்தத் தலைப்பு எடுத்துக் கொள்ளப் பெற்றது. இவ்விரு தத்துவங்களுக்கிடையே ஒருமை நிலை தோன்றாது போனாலும், இவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு மதிப்பு உணர்வுடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு வளர்ந்தால் பகைமையாவது குறையுமல்லவா?

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் என்கிற செழுத்தமிழ் வழக்கு நெறி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் வாழ்வில் தோன்றி வளர்ந்து வந்துள்ள நெறியாகும். "சைவத்தின் பழைமை கற்காலத்திற்கும் முற்பட்டது. இப்பொழுது உலகிற் காணப் படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது" என்று சர். ஜான்மார்ஷல் என்ற அறிஞர் கூறியுள்ளார். சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்களில் சிவலிங் கங்களும் உண்டு. சங்க காலத் தமிழர்களின் சமயமும் சைவ

1. தமிழ் இந்தியா. ந.சி.க. பக்கம் 207