பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. இ. குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கையில் சிறப்புற்று விளங்க அடக்கம் தேவை. அடக்கத்துடன் வாழ்தல் ஒரு துண்ணிய கலை, முற்றிய கதிர்மணிகள் தலை சாய்ந்து கிடக்கும். தாழ்வெனும் தன்மை பூண்டொழுகல் சைவத்தின் பண்பு. எந்தச் சூழ்நிலையிலும் அடக்கம் தவறுதல் கூடாது. சான்றோர்க்கு வணங்கி வாழ்தலைத் தவிர்க்கலாகாது. நற்றமிழ் நாவலுரர் திருவாரூரில், எநதை ஈசனை வணங்கும் விரைவுணர்ச்சியில், தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சிவனடியார்களை வணங்காமல் சென்று விடுகிறார். வணங்கக் கூடாது என்பது சுந்தரரின் எண்ணமன்று. பரபரப்பான விரைவு உணர்ச்சி! ஆனால், திருவாரூர்த் தியாகேசன் அரூரர்ர்கு இதனை நயம்பட எடுத்து உணர்த்துகின்றார். அதன்பின் ஒரு தடவை வணங்க மறந்த ஆரூரர், பலதடவை "அடியேன், அடியேன்” என்று பன்னிப்பன்னிக் கூறி வணங்குகின்றார். வெற்றி பொருந்திய வாழ்க்கை அடக்கத்தில் பிறக்கிறது. புகழ் பொருந்திய வாழ்க்கை அடக்கத்தினாலேயே கிடைக்கும். அடக்கத்தோடு தொடர்பில்லாத புகழ், வெற்றி ஆகியன வெறும் ஆகாசவாணமேயாம். நிலைத்த பயன் தாரா.

"அருளு பெருஞ் சூலையினால்

ஆட்கொள்ள அடைந்துய்ந்த

தெருளும் உணர்வில்லாத

சிறுமையேன் யான்”

என்று அப்பரடிகள் கூறிக் கொண்டதே அவரை ஆளுடைய அரசு ஆக்கிற்று.

நட்பு ஒரு கலை ! பழகிய நட்பைப் பெருகும் வண்ணம் வளர்த்துக் கொள்ளுதலும் ஒரு கலை. இங்ங்ணம் நட்பில் பயின்று வளர்தல் ஒரு சிறந்த வாழ்வியல் அறம். ஒருவர்