பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தி குன்றக்குடி அடிகளார்

என்றோ, மாற்ற முடியாதது என்றோ, மாற்றக் கூடாதது என்றோ சைவ சித்தாந்தம் கூறவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இத்துறையில் சைவ சித்தாந்தச் சமய நெறியாளர்கள் துறைபோக ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அது மட்டுமன்று, அங்ங்னம் துறைபோக ஆய்வு செய்வதற்குரிய சூழல்கள், மெய் கண்ட நூல்களும் திருமுறைகளும் தோன்றிய காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் - இந்தியநாட்டில் முதலாளித்துவ சமுதாயம் தோன்ற வில்லை, பண்ணையடிமைச் சமுதாயம் இருந்தது. பண்ணையடிமைச் சமுதாயத்திலும் கூட, நுகர்வுகளின் எல்லை குறைவாக இருந்தமையினாலும் மூல தனம் தோன்றாமையினாலும் இத் துறையில் அதிகக் கவனம் ஈர்க்கப்படவில்லை. இதனை, z

"தென்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே செல்வத்துப் பயனே யிதல்

துய்ப்பே மெனினே தப்புந ലഖബേ°

என்ற புலநானூற்றுப் பாடலால் அறியலாம். மார்க்சு காலத்தில் உலக நாடுகளுள், பல நாடுகளில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றிவிட்டது; பனப் பழக்கம் தோன்றிவிட்டது; படைப்புக் களங்கள் தோன்றி விட்டன; நாடுவிட்டு நாடு சந்தைக்குச் செல்லும் இயல்புகள் வளர்ந்துவிட்டன. இந்தச் சமுதாய அமைப்பில் சுரண்டல் முறை வலிமை பெற்றது. அதனால், மார்க்சு இத்துறையில்

23. புறநானூறு - 189