பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தி குன்றக்குடி அடிகளார்

களைப் போலவே ரீ கண்டருத்திர மூர்த்தியால் திருநந்தி தேவர் வழியில் உபதேசிக்கப் பெற்று ஒரு ஞான சந்தான்ம்ஞான பரம்பரை வந்து கொண்டிருக்கிறது. இந்த ஞான சந்தான் வழியினர் மெய்கண்ட சாத்திரங்கள் என்ற ஞான நூல்களையும், பண்டார சாத்திரங்கள் என்ற ஞானப் பனுவல்களையும் செய்தருளியிருக்கின்றனர். அதுபோலவே, அம்மையப்பனாக விளங்கியருளும் பெருமானின் திருவருள் அடியொற்றி நின்று நாட்டில் நடமாடிய அருள்நிறைந்த சமயாசிரியன்மார்களும் அருளாசிரியன்மார்களும் அருளிய தேவார, திருவாசகமும், இவற்றினைச் சார்ந்து தோன்றிய திருமுறைகளுமான சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் உள்ளன. இவை சிவநெறி சார்ந்த ஞான வழியில் தோன்றிய அருள் நூல்கள். சிவாகமங்களுக்கும் இவற்றுக்குமிடையே மாறுபாடுகள் இருத்தற்கில்லை. திருமுறை நெறிகளுக்கு மாறுபாடாகச் சிவாகமங்களில் ஏதேனும் இருப்பின், இவை இடைச் செருகல் என்று கருதி ஒதுக்கத்தக்கனவே! திருமுறைகளும் பதிவாக்கே என்று கொண்டு போற்றுதல் சைவ மரபு.

பரமசிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் நெறிகள் அவ்வக் காலத்திற்கு இசைந்தவாறும், ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தகுதி நோக்கியும் மாறுபடும். அதனால் மிகப் பிற்காலத்தே இதுதான்் உய்யும் நெறி என்று இறையருளால் உணர்த்திய திருமுறை நெறிதான்் வலிமையுடையது; இன்றைக்கு ஏற்புடையது. அது மட்டுமன்று. சைவப் பெரு நெறிக்கு இடர்பாடுகள் வந்துற்றபோதெலலாம் சிவாகமங்கள் யாதொரு அரணும் செய்யவில்லை; கையற்றுப் போயின. ஆனால் திருமுறைகள்தான்். சிவ நெறியின் மாண்பை, திருவருள் துணைகொண்டு நிலை நிறுத்தி வெற்றி