பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயால் மக்கள் உழல்வது கண்டு தான்ே அதை ஏற்று அன்னையானார்

பிரான்சு நாடு சென்ற திருமதி மீரா, லூனெல் என்ற நகரில் தங்கியிருந்தார். கடுமையான நோய் கண்ட மீரா அவர்கள் எப்படியோ இறைவன் அருளால் மரணப் பிடியிலே இருந்து ໓6.ຽTLiff.

இக்கட்டான நிலைக்குப் பிறகும்கூட, மீரா அவர்கள் முன்பு போலவே தனது ஆன்மீகத் தொண்டுகளைத் தளராமல் செய்து வந்தார். அப்போதும்கூட அவர்,நோயால் படுக்கையில் படுத்துக் கொண்டே பிரான்சு நாட்டிலும், அமெரிக்க நாட்டிலும், மற்றும் சில இடங்களிலும் பணிகள் செய்து வந்தது குறிப்பிடத்தக்க மக்கள் தொண்டாகும்.

திருமதி மீரா கருவிகளாகப் பயன்படுத்திய மனிதர்களது முகங் களை; அவரால் படுக்கையில் இருந்து கொண்டே பார்க்க முடிந்தது.

அந்த மக்கள் தங்களது வேலைகளைச் சொந்த பலத்தால் செய்ய முடியாதபோது, அவர்கள் மூலமாக அந்தப் பணிகளை மீரா நிறைவேற்றி வந்தார்.