பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 27

உடல்களுக்குள் அந்த ஆடை சக்தி ஊடுருவித் திரும்பி விடுவார்கள்.

எனது உடையை அவர்கள் தொட்டதும் ஆறுதல் பெறுவார் கள், பிறகு அதிக மகிழ்ச்சியுடனும், அதிக பலத்துடனும் தங்களது உடல்களுக்குள் ஆடை சக்தி ஊடுருவித் திரும்பி விடுவார்கள்.

இந்த கனவு வேலை இரவில் தான்ே நடக்கும். அதை நான் நினைத்து மிகவும் ரசிப்பேன். இதனுடன் எனது கனவுகளை ஒப்பிட்டால் எனது மற்ற பகல் பணிகள் எல்லாம் சர்வ சாதாரண மாக மாறி அவை சுவையற்று விடுவனவாகத் தோன்றின.

மீராவுக்கு மனித இனத்தின் மீது மட்டும்தான்் அளவற்ற அன்பும், கருணையும் உண்டு என்பதல்ல; விலங்குகளும், மரங்களும். தாவர இன வகைகளும் கூட, மீராவின் உள்ளுணர் விற்கும், ஆழ்ந்த அன்புக்கும், பற்றுக்கும், கருணைக்கும் உரிய உயிரினங்களாக இருந்தன.

பன்னிரண்டு வயதாக இருந்த மீரா, பாரீஸ் நகர் அருகே உள்ள ஒரு காட்டிற்கு அடிக்கடி செல்வார். அங்கே தனி ஒருத்தியாகவே தியானத்தில் அமர்ந்து விடுவார். அப்போது மரங்களுடன் நெருங்கியத் தொடர்பும், பறவைகளுடனும், அணில்களுடனும் தொடர்பு கொள்வார். அவை மீராவிடம் வந்து கொஞ்சி விளையாடி மகிழும்.

புதுச்சேரி ஆசிரமத்தில் இருக்கும் ஏதாவது ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வந்தால், அந்த மரம் அப்போது தெய்வ அன்னையாக விளங்கிய மீராவிடம் சென்று முறையிடுவது வழக்கமாம்!

இதோ மீராவிக்கு விலங்குகளுடன் எத்தகையத் தொடர்பு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

எழில் கொஞ்சும் பாரீஸ் நகரில் ஒரு பூங்கா. அங்கு விலங்குகளும் வளர்க்க வைத்திருந்தார்கள். சிங்கம் ஒன்று அங்கு அப்போது வந்திருந்தது. கூண்டில் அடைபட்ட அரிமா அல்லவா? அதனால் அது அளவுக்கு அதிகமான கோபம் கொண்டிருந்தது.