பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அவரது சொந்த சுபாவங் களையே தனது மக்கள் மீதும் ஆட்சி செலுத்துபவராக அவர் விளங்கினார்.

தாயார் அவ்வாறு நடந்ததால்தான்், மீராவும், அவருடைய தமையனாரும் தாய் கிழித்தக் கோட்டைத் தாண்டி மீறாதது மட்டு மன்று; அவர்களுக்குள்ளேயே ஒழுக்கமெனும் ஓர் ஒளி மனத்துக்குள் படர்ந்தவர்களாகப் பல இடங்களிலே, பல பிரச்னைகளிலே காணப்பட்டார்கள். அந்தச் சம்பவங்களை நீங்கள் போகப் போகக் காண்பீர்கள்.

ஒரு நாள் மீராவின் தாயார் தனது குழந்தைகள் உடலுக்கு எது நல்லது, எது சத்துள்ளது என்று எண்ணி, ஒருவித சத்துணவைச் சமையல் செய்தார்.

பிள்ளைகளை அழைத்து, தான்் சமைத்த உணவு வகை களைத் தாயார் பரிமாறினார். குழந்தைகள் இருவருக்கும் அந்த உணவு சுவையாக இல்லாததால், அதை உண்ண மறுத்து விட்டார்கள்.

அந்தத் தாய் அறிவின், கூர்மையும், மதி நுட்பமும், திறமையும் உடையவர் ஆதலாலும், கண்டிப்பும், கட்டுப் பாடும் பெற்றவராக இருந்தவர் என்பதாலும், பிள்ளைகளுக்குப் பல முறை தனது சமையல் உணவுகளின் சத்துள்ள விவரங்களை விளக்கினார்.

அந்த உணவிலிருக்கும் சத்துக்கள் வகைகளையும் அதனால் ஏற்படும் உடல் நலக் குறிப்புக்களையும் அன்போடு எடுத்து உரைத்தார். கேட்கவில்லை தான்் பெற்ற பிள்ளைகள்.

இந்த உணவு எங்களுக்கு வேண்டாம் என்று கட்டுப் பாடாக, கண்டிப்பாக தனது தாயாரிடமே குழந்தைகள் சொல்லி விட்டார்கள்.

வந்தது கோபம் அந்தத் தாய்க்கு இன்றைக்கு உங்களுக்கு இதுதான்் உணவு, வேறு எதுவும் கிடையாது சாப்பிட, என்று கண்டிப்பாகக் கூறினார்: