பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அமெரிக்கா சென்று வேத முழக்கங்கள் செய்த பின்பு சுவாமி விவேகானந்தர் பெருமான் மண்டபம், இராமேஸ்வரம் நகர்களுக்கு கப்பலில் வந்திறங்கித் தமிழ் மண்ணிலே காலடி வைத்ததுபோல, பாரீஸ் நகரை விட்டுக் கப்பலில் புறப்பட்ட பல்கலை வித்தகி மீரா, மண்டபம் வரைக் கப்பலில் வந்து, அங்கிருந்து தனுஷ்கோடி ரயில் வண்டியில் ஏறி, பிரெஞ்சு நாட்டு ஆட்சியின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த புதுச்சேரி நகரிலே காலடி வைத்தார்.

1914-ஆம் ஆண்டில், மார்ச் மாதம் 29-ஆம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு, திருமதி. மீரா மகான் அரவிந்தரை, அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும், ஆழ்ந்த பக்தி மவுனம் சற்று நேரம் நிலவியது.

திருமதி. மீரா என்ற அன்னை - அரவிந்தர் என்ற மகானை. முதன்முதலில் சந்தித்ததும், அந்தப் பெருமானுடைய திருவடி களில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த மெளனத்திலே ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

மகான் அரவிந்தர் பெருமான் தனக்கு ஒன்றும் புதியவரல்லர். பாரீஸ் நகரில் நாள்தோறும் மீரா கண்ட தனது கனவுகளிலே தோன்றிய பல மகான்களுள், அரவிந்தர் மகரிஷியும் ஒருவராக இருந்தார். எனவே, கனவிலே கண்ட ஞான ரிஷியை அவர் நனவிலே கண்டு கொண்டார்.

'எந்த அரவிந்தரை நாம் கிருஷ்ணன் என்று எண்ணி கனவிலே கண்டோமோ, அதே கிருஷ்ணனைக் கிருஷ்ணா என்று குறிப்பிட்டு அழைத்து வந்தோமோ, அவரே - இந்த அரவிந்தர் என்பதை மீண்டும் மீண்டும் கவனப்படுத்திக் கொண்டே களிப்படைந்தார். அன்னை என்ற திருமதி. மீரா,

தம்மையும், தாம் கற்றவை அனைத்தையும், ஆன்மீகத் துறையில் தாம் பெற்றிட்ட ஞானம் எல்லாவற்றையும், தனது உடைமைகள் முழுவதையும், ஒரு சிறிதையும் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் மகரிஷி அரவிந்தரின்