பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

மனிதரெல்லாம் உடன் பிறப்புக்களான சகோதரர்கள்; மனிதரெல்லாம் சரிநிகர் சமத்துவம் உடையவர்கள்; மனித ரெல்லாம் யாருக்கும் அடிமைகள் அல்லாத சுதந்திரப் பிறவிகள் - என்ற மனித உரிமைகள் பிறந்த அந்த வீர பூமியிலே தவழ்ந்து விளையாடிய வித்தகக் குழந்தைதான்் நாம் அன்னையாகக் கொண்டாடி வரும் தொய்வீக உணர்வுடைய விந்தைக் குழந்தை:

அந்த நேரத்தில் அரசன் என்பவன் தன்னைத் தான்ே கடவுள் என்று எண்ணி இறுமாந்திருந்தான்் காலச் சக்கரம் அவனது ஆட்சிமீது, ஆணவம் மீது, சர்வாதிகாரம் மீது மோதிப் பொடியாக்கி, புரட்சிப் புழுதியைப் பூகம்பமாக வெடிக்க வைத்தது.

இதனால் ஃபிரெஞ்சுக் குடிமக்கள் அறிவு பெற்று விழித் தார்கள். ஃபிரான்ஸ் நாடு உலகுக்கு எல்லாம் இந்தத் தத்துவப் பிச்சையை - அடிமையர்களாக, மூட நம்பிக்கையர்களாக; மறுமலர்ச்சி அறியா அறிவீணர்களாக வாழ்ந்த நாடுகளின் கரங்களிலே தவழந்த திருவோடுகளிலே தான்மாகப் போட்டது.

மனித உரிமைகள் என்ற அறிவுப் பசியைத் தீர்த்து வைத்த அந்த நாட்டிலே பிறந்த அறிவுக் குழந்தைதான்் - நாம் புகழோடு போற்றி வணங்கும் தெய்வ அன்னையான திருக் குழந்தை!

ஃபிரான்ஸ் நாட்டின் வழி வழிவந்த ஆயிரம் ஆண்டு களின் அடிமைச் சங்கிலி முடிச்சுக்களை, உரிமை என்ற சம்மட்டி கொண்டு உடைத்தெறிந்து, மக்கள் கொடுங்கோன்மையை ஒழித்தார்கள்.

மன்னன் இல்லாமலேயே நாடு நன்றாக நடக்கும் என்ற வியப்பை, இந்த விந்தை உலகுக்கு உணர்த்திக் காட்டிய விந்தை மிகு மண்ணிலேதாம் நாம் அன்னை எனப் போற்றும் அற்புதக் குழந்தையும் பிறந்தது!

அதாவது, ஃபிரான்ஸ் நாட்டின் தலை நகரமான, நவ

நாகரிகத்தின் பிறப்பிடமான பாரீஸ் எனும் அழகு தவழும் நகரிலே பிறந்தார் - அன்னை அவர்கள்; தெய்வமணம் கமழும் சிசுவாக!