பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 91

அந்த விழாவிலே மகான் அரவிந்தர், தான்் சிறையிலே ஓராண்டு காலம் சிந்தித்தாற்றிய தேசிய ஞான வேள்விச் சம்பவ நிகழ்ச்சிகளை விளக்கமாக மக்களுக்கு உபதேசம் செய்தார்.

அரவிந்தர் சிறைத் தண்டனை பெற்றதும், 'வந்தே மாதரம்' என்ற அவரது பத்திரிக்கை நின்று விட்டது. அதற்குக் காரணம், அந்த இதழ் அச்சாகி வந்த அச்சகத்தைப் பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்ததுதான்்.

சிறையிலே இருந்து வெளியே வந்த தேச ஞானி அரவிந்தர், கர்மயோகின்' என்ற ஆங்கில பத்திரிக்கையைத் துவக்கினார். இந்த ஏடு, வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களுக்கும், அயல் நாட்டினருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் போக்குக் களைத் தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட ஆங்கில இதழாகும்.

வங்காள மக்களது சுதந்திர உணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றுவதைப்போல, வங்க மொழியில் 'தர்ம’ என்ற ஒரு விடுதலை விளக்கப் பத்திரிக்கையை நடத்தலானார்; அந்த ஏடுகள் இரண்டிலுமே மக்களது பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு அற வழிகளைப் போதித்தார் அரவிந்தர்!

இரண்டு பத்திரிக்கைகளும் தேச விடுதலைக்காகவே போராடும் பத்திரிக்கைகள். என்றாலும், சிறை புகுவதற்கு முன்பிருந்த தீவிரவாத அரவிந்தராக இல்லாமல், இப்போது முழுக்க முழுக்க தர்ம நெறி, அற வழிகளிலே போராடும் அரவிந்தராக நின்று அவற்றை நடத்திக் கொண்டு வந்தார்.

'நாட்டுக்காக உழைத்து உயிர் விடுவதை அரவிந்தர் கர்ம யோகம் என்று கூறினார். உயிர் வாழும்போதும் உயிர் துறக்கும் போதும் வணங்க வேண்டிய அன்னை 'பாரத மாதா” என்றார்.

அரவிந்தர் தனது தீவிரவாதப் போக்கைக் கைவிட்டுத் திருந் தினாலும், பிரிட்டிஷ் ஆட்சி அவர்மீது கொண்டிருந்த பகை நின்ற பாடிலலை.

எப்படியாவது அரவிந்தரைக் கைது செய்து நாட்டை விட்டுக் கடத்திவிட வேண்டும் என்ற எண்ணமே தீவிரமாக