பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அந்த வேலை நடைபெற வேண்டுமானால், ஓர் ஆசிரமம் தேவை. அதற்கான பொறுப்பான அருட்தொண்டர்கள் தேவை! அந்த ஞானத் தொண்டின் அரிய பணியை ஆற்றுவதற்குரியவர் அன்னை அவர்கள்தான்் என்பதை உணர்ந்த அரவிந்த மகரிஷி, அந்த முழுவேலையை அன்னையிடமே வழங்கிவிட்டு, அவர் தனிமையை நாடிச் சென்று யோக சித்தியிலே மூழ்கியதால்தான்் அவரால் கிருஷ்ண பரமாத்மாவின் அருள் உணர்வைப் பெற முடிந்தது.

ஞானி அரவிந்தருடைய சொந்த சாதனைகளைப் பொறுத்த வரை, அனைத்து ஆன்ம சித்திகளையும் அவர் அடைந்திருந்தார். ஆனந்த மயமான அகண்ட உணர்வு அவருடைய உடல் அணுக்கள் தோறும் ஊடுருவின.

இறை கட்டளையே அன்னையின் பணிகள் :

சொந்த சித்தியல்ல இது. கடவுள் கட்டளை நிறைவேற்ற வேண்டிய பணி ஒன்றுதான்் அரவிந்தர் பெருமானுடைய இலட்சியம். எனவே, பணி மேலும் தொடர்ந்தது.

அரவிந்தரும் பாடுபட்டார். அன்னையும் உழைத்தார். ஆனால், உழைப்பு அன்னைக்குத் தான்். அரவிந்தருக்கோ யோக சாதனையே வேலை. அதாவது நுண்ணுலக பணி:

இந்த யோகத்தின் வேலையும், யோக சாதனையும் ஒன்று. ஆணவமோ, கர்வமோ, தான்ென்ற தன்முனைப்போ ஒரு சிறிதும் இல்லாமல் - இறைவனுக்காக, ஆண்டவனுக்காக, அவருக்கு நைவேத்தியப் பொருளாக, கடவுள் உணர்வில் ஆழ்ந்து செயல்படும் வேலைகள் எல்லாமே யோகம் ஆகும். அதனால் தான்் அரவிந்தர் "வாழ்வனைத்துமே யோகம்" என்றார்.

அன்னை பெருமாட்டிக்குப் பல ஆண்டுகளாகத் தூக்கம் என்பதே கிடையாத அளவுக்கு ஓயாத பணி பல ஆண்டுகளாக அவருக்கென ஒரு படுக்கைக் கூட கிடையாது.