பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ குணம் பூவுக்கு இருப்பதால் : அன்னை மலர் மூலம் வாழ்த்தினார்:

ஆன்மீக ஞான உணர்வு என்பது இரு வகைப்படும். ஒன்று Gudé0 o6T646 Erftsq Over Mind Consciousness ST6TuSTSD. இரண்டாவது உணர்வு அதிமானசம் Super Mind எனப்படும். அதாவது மேல் மனவுணர்வை விட உயர்ந்தது ஆன்மீக உணர்வு.

கிருஷ்ணன் சக்தியை

உணர்வாகப் பெற்றார்!

மகரிஷி அரவிந்தர் மனத்தில் 24.11.1926-ஆம் ஆண்டு

இறங்கிய உணர்வு - பரமாத்மா கிருஷ்ணனுடைய உணர்வாகும்.

அதை மன உணர்வு என்றும் கூறுவார்கள்.

ஆண்டாண்டுகளாக இந்த உலகத்தில் பரிதாபமாகத் தவித்துக் கொண்டிருக்கும் இடர்கள், துன்பங்கள், வேதனைகள், துயர்கள், அசுரத் தாக்குதல்கள் ஆகிய இவற்றுக்குரிய இறுதித் தீர்வு. அதிமானசம் என்ற ஆன்மீகத் தத்துவத்திடமே இருக்கிறது.

அந்த தத்துவ உணர்வை மேலே இருந்து கீழே இறக்கி, அதை உலகத்தில் நிலை நாட்டுவதே மகான் அரவிந்தருடைய இலட்சிய நோக்கமாகும். அந்தக் கட்டளை, அரவிந்த மகரிஷிக்கு ஆண்டவனிட்ட அருட்பணிக் கட்டளையாகும்.