பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அவர்களது அன்றாட வாழ்க்கையில் பூக்கள் அழகுக்கும் தனியொரு முக்கியவத்துவம் அளிக்கின்றார்கள். இதுவே ஒர் அழகுக் கலை தான்ே!

அன்னை ஜப்பானில் தங்கி இருந்தபோது, சுவையான சில அனுபவங்கள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று, ஜப்பானில் உள்ள வீடுகள் எதிர்பாராமல் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடும் நிலைகள், அதனால்தான்் ஜப்பான் வீடுகள் எல்லாம் மரத்தால் உருவானவையாக உள்ளன.

ஜப்பான் நாட்டில் பூகம்பம்! எரிமலை

ஜப்பான் நாட்டில் அடிக்கடி பூகம்ப நிலைகள் உருவாகும்! நிலப் பிளவுகள் அந்த மக்களுக்குப் பெரும் நாசத்தை உண்டாக்கி விடும். மரத்தால் வீடுகள் அங்கே கட்டப்பட இதுவும் ஒரு தலையாய காரணமாகும்.

ஜப்பான் நாட்டின் தீ விபத்துக்களை உண்டாக்கும் அக்னி தேவனை ஒருநாள் தெய்வத் தாயான அன்னை சந்தித்தார். அன்று அன்னை படுக்கையிலே படுத்திருந்தார். ஒருமுனைப்பட்டு அன்று தமது நுண்ணுலக வேளையில் ஈடுபட்டிருந்தார்.

திடீரென நெருப்புப் புகை மூட்டம் அவர் வீட்டை நெருங்கி வருவதைப் போல உணர்ந்தார். அதை அன்னை கூர்ந்து கவனித் தார். அது ஒர் உணர்வுள்ள ஜீவனாக அவர் கண்களுக்குப் புலப்பட்டது.

'ஏய், நீ ஏன் இங்கே வந்திருக்கிறாய்? என்று அன்னை அந்த தீ விபத்து நெருப்புத் தேவனைப் பார்த்துக் கேட்டார். அன்னையின் அற்புதம்

'இன்று இந்த வீட்டை எரிப்பதற்கு எனக்கு உரிமை இருப்ப தால் இங்கே வந்திருக்கிறேன் என்று கூறினான் அந்த தேவன்.

'இருக்கலாம் உனக்கு உரிமை. ஆனால் இங்கே அதைச் செய்யக் கூடாது என்று கூறி விட்டார் அன்னை பெருமாட்டி