பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 53

இந்த உலகத்தில் தெய்வீக வாழ்க்கையை நிலை நாட்டிட ஓயாது உழைத்து வரும் தெய்வ அன்னையின் நான்கு முக்கிய சக்திகளுள் திருமகள் ஒருத்தி ஆவார். அந்த தெய்வத் தாய் அன்பும், அழகும் இல்லாத இடத்தில் வருகை தரமாட்டார்.

அப்படியானால் வாழ்க்கையை அழகாக அமைப்பது எப்படி? வாழ்வையே ஒரு கலையாக அமைப்பதுதான்்! அந்த அழகான அமைப்பை அன்னை ஜப்பான் நாட்டில் கண்டதாகக் கூறி பெருமிதம் கொள்கிறார்.

ஜப்பானின் இயற்கை அழகு

அந்த எழில் வாழ்க்கைக்கு ஏற்ப, ஜப்பான் நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும், எழில் மயமாகவே இயற்கைக் காட்சிகள் இருந்தன.

வண்ண வண்ண மலர் சோலைகள்; பச்சை பசேலென்ற காவனங்கள்; சலசலப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நீரருவி ஓடைகள், கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் வயல் காட்சிகள் பார்ப்பதற்கு அவை பரவசமாக அமைந்துள்ளன.

ஜப்பானியர்களது ஒவ்வொரு வீடும் இயற்கையோடு சுற்றியுள்ள அழகு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விடும் பூக்களின் அழகுக் காட்சிகளோடு பூத்து மணந்து கிடந்தன!

வீட்டின் வெளிப்புறங்கள் மட்டுமல்ல; வீடுகளுள் சென்று பார்த்தால் அதனுள் வைக்கப்பட்டிருக்கும் எல்லாப் பொருட்களும் எழிலான தோற்றத்தோடு, பொருத்தமாக, அங்கு இருக்க வேண்டிய இட வசதிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு இருக்கின்றன. பூக்கோப்பைகளை வரிசை வரிசையாக அமைக்காத வீடுகளே காண்பது அரிது.

ஜப்பான் பூக்களைப் போற்றுவது ஏன்?

ஜப்பானிய மக்கள், தங்களது இல்லங்களை அலங்காரம் செய்வதையே ஒரு நுண்கலையாகப் பயின்றுள்ளார்கள்.